இனிய வுயிரை, பறிப்பன் - போக்குவேன், என - என்று வஞ்சினங்
கூறி, மாதவனின்மேல் - சுதத்தமுனிவன்மேல், மாற்ற அரிய சீற்றமொடு வந்தான் - பிறரால்
மாற்றமுடியாத பெருங்கோபத்தோடு வந்தான். (எ-று.)
அரசன், வேட்டையில் விலங்குகள் அகப்படாததனால் முனிவர்மேல்
கோபங்கொண்டு வந்தான் என்க. காடெங்கும் தேடினதை, ‘அடவிபுடை தடவி’ என்றார். வினை -தொழில். பாற்றியவன் - நீக்கியவன்: பாற்றுதல் - நீக்குதல்: ‘பகலோன் கெடுமெனப் பாற்றுவனபோல’ (பெருங். உஞ்சைக். 38,15).
(38)
258. |
கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய்1 |
|
ஐந்தினொடு பொருததொகை யையம்பதி னிரட்டி |
|
செந்தசைகள் சென்றுகவர் கென்றுடன்2
விடுத்தான் |
|
நந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே. |
(இ-ள்)
(அரசன்), அருள் மழை நந்தி பொழியும் நாதன் அவன் மேல் - உயிர்கள்மேல்) அருள்மழை
மிக்குப் பொழியும் நாதனாகிய சுதத்தமுனிவன்மேல், கொந்து எரி உமிழ்ந்து - சினத்தால்
தீ உமிழ்ந்து, எதிர் குரைத்து - எதிர்நோக்கிக் குரைத்து, அதிர்வ - (உயிர்களை)
நடுங்கச்செய்வனவாகிய, ஐந்தினொடு பொருத் தொகை ஐம்பதின்இரட்டி கோள் நாய் -
ஐந்நூறு வேட்டை நாய்களை, உடன் சென்று - விரைவிற் சென்று, செந்தசைகள் கவர்க என்று-
செவ்விய தசைகளைப் பிடுங்கித் தின்னுக என்று சாடைகாட்டி, விடுத்தான் - ஏவினான்.
(எ-று.)
அரசன் ஐந்நூறு நாய்களை முனிவன்மேல் ஏவினானென்க.
கொந்து - கோபம்: ‘இந்தனக் குழுவைக் கொந்தழலடூடம்’ (ஞானா. 63 - 11). கொந்து - கொத்து எனலுமாம். குரைத்தல்
- குலைத்தல். நாய்கள் எதிர்நோக்கிக் குரைத்த
|