(இ-ள்).
உயிர்க்கு இதத்தினை இனிது அளித்திடும் இயற்கை - உயிர்கட்கு அறவுரையாகிய நன்மையை
இனிதாக நல்கும் இயல்புடைய, சுதத்தமுனி -சுதத்தாசார்யர் என்னும் முனிவரராய, தொத்து
இரு வினைத்துகள் உடைக்கும் - திரளாகிய (காதி அகாதி யென்ற) இருவினைகளாகிற அணுத்திரள்களை
அழிக்கும், பதத்து - நிலையினையுடைய, அயன் - சிரேஷ்டர், மதக் களிறு என - ஓர்
மதயானைபோல, படிமம் நிற்ப - பிரதிமா யோகத்தில் நிற்க, (திகம்பரனாகிய முனிவரனைக்
காணல் சகுனத்தடையென் றெண்ணிய வேந்தன்), கதத்துடன் - கோபத்துடன், இழித்து - இழித்துரைத்து, அடு கடத்திடை
- விலங்குகளைக் கொல்லுதற்கான காட்டி, னிடத்தை, மடுத்தான் -(தன் சேனைகளோடு) அடைந்தான்.
முனிவரராய சிரேஷ்டர் படிமம் நிற்கக்
கண்ட மன்னன் வெகுண்டு வேட்டைக்கு வனத்தில் சென்றான் என்க.
இதம் - ஹிதம்: வடசொல். தொத்து
- உயிரைத் தொத்திக்கொண்டுள்ள (இருவினை) எனினுமாம். பிறவிக்குக் காரணமாதலின்
இருவினைத் துகள் என்றார். துகள் -அணு. அயன் - ஐயன்: போலி. ‘கானயானை போல
மூன்று காலயோகு தாங்கினான்‘ (மேரு.428) என்பதை ஈண்டு ஒப்பிடுக. படிமை -ப்ரதிமை.
‘எஞ்சலில் கொள்கை தாங்கி யிராப்பகல் படிமம் நின்றான்‘ என்றார் (மேரு. 141ல்)
வாமன முனிவரும். மடுத்தல் - உட்புகுதல். (37)
257. |
கூற்றமென வடவிபுடை தடவியுயிர் கோறற் |
|
கேற்றபடி பெற்றதில னிற்றைவினை முற்றும் |
|
பாற்றியவ னின்னுயிர் பறிப்பனென வந்தான் |
|
மாற்றரிய சீற்றமொடு மாதவனின் மேலே. |
(இ-ள்)
(வேட்டை மேற்சென்ற யசோமதி), கூற்றம் என - யமனேபோல, அடவி புடை தடவி - காடெங்கும்
தேடியும், உயிர் - விலங்குயிர்களை, கோறற்கு - கொல்வதற்கு, ஏற்றபடி - ஏற்ற வகையில்,
பெற்றது இலன் - பெற்றிலன்: (அதனால்), இற்றை வினைமுற்றும் பாற்றியவன் - இன்றைத்
தொழில் முழுவதும் கெடுத்த முனிவனுடைய, இன்உயி்ர்
|