கெடுக
என்றால் அவ்வாறே கெட்டொழியும் ; இவண் மேகம் வருக எனின் - இவ்விடத்தில் மழைபொழிக
என்பாராயின், அதுவும் விதியின் வரும் - அம் மேகமும் கிரமமாக வந்து மழை பொழியும்,
ஏக மனராம் முனிவர் பெருமை இதுவாகும் - தவத்தில் ஒன்றிநிகழும் ஒரே மனமுடைய இம் முனிவரரின்
பெருமை இத்தன்மைய தாகும்: (எ-று.)
வணிகன்,
முனிவரர் பெருமை இதுவாகும் என்று எடுத்துக்கூறினான் என்க.
‘ஆவ
தற்கும் மழிவதற்கும் மவர், ஏவ நிற்கும் விதியும்,‘ (கம்பர், மந்தரை சூழ்ச்சி.
10.) என்பதை ஈண்டு ஒப்பு நோக்குக. (ஒருவர் கெடுமாறு) முனிவரர் உரைத்தால் அங்ஙனமே
ஆகும்: ஆயினும், அவ்வாறு செய்யின் முனிவரர் தன்மைக்கு இடையூறாகுமாதலின் கையாளுவதில்லை
யென்றுணர்க. இதனை ஸ்ரீராணம் 278-ஆம் பக்கத்தில் காண்க. கைமாறு கருதாமையின் வானமழை
போலும் கை என்றார்.
263. |
அடைந்தவர்கள் காதலினொ1
டமரரச ராவர் |
|
கடந்தவர்கள் தமதிகழ்வில் கடைநரகில் வீழ்வர் |
|
அடைந்தநிழல் போலருளு முனிவுமில ரடிகள் |
|
கடந்ததிவ ணுலகியல்பு கடவுளவர் செயலே. |
(இ-ள்.)
(இம்முனிவரரை), காதலினொடு அடைந்தவர்கள் - பக்தியோடு சேர்ந்தவர்கள், அமர் அரசர்
ஆவர் -தேவேந்திர ராகுவர்: தமது இகழ்வில் கடந்தவர்கள் - தாங்கள்கொண்ட இகழ்ச்சியினால்
நீங்கியவர்கள், கடை நரகில் வீழ்வர் - ஏழாம் நரகத்தில் வீழ்ந்து (பிறந்து) துன்புறுவர்:
(ஆயினும்), அடிகள் இம்முனிவரர், அடைந்த நிழல் போல் அருளும் - (வெப்ப முற்றார்)
அடைந்த நிழல் போலக் குளிர்ந்த அருளும், முனிவும் இலர் - வெகுளியும் இல்லாதவர்:
(அதுவேயுமன்றி), கடவுள் அவர் செயல் - முனிவரர்களின் செய்கை, அவண் உலகஇயல்பு கடந்தது
- இவ்வுலக மக்களின் இயல்பைக் கடந்ததாகும்.
|