261. |
வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர் |
|
அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ
னடிக்கண் |
|
சிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான் |
|
மறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய். |
(இ-ள்)
மாலை மறம் வேலோய் - வெற்றிமாலை புனைந்த வீரவேலேந்திய வேந்தே, அரசினை துகள்
என வெறுத்து -அரசச் செல்வத்தினை அற்பமென்று வெறுத்து, உடன் விடுத்து - (இல்லறப்பற்று
அனைத்தையும்) ஒருங்கே விட்டுத் துறந்து, பேர் அறப் பெருமலை பொறை எடுத்தவன் - சிறந்த
தருமமாகின்ற பெரிய மலைபோன்ற தபோபாரத்தினைத் தாங்கின முனிவனது. அடிக்கண் -
திருவடிக் கண், சிறப்பினை இயற்றிலை - சிறந்த பூசனை செய்யாமல், சினத்து எரிமனத்தால்
- கோபக் கனலையுடைய உள்ளத்தோடு, மறப்படை எடுப்பதுஎன் - வலிய வாளோங்குவது என்னை?
முனிவனை வணங்குவதைவிட்டுப் பிணங்குவது யாது காரண மென்றானென்க.
அரசு
தவம் முதலியவற்றையும் பாரமெனக் கூறுதல் மரபு: ‘அருந்தவ மரசபார மிரண்டுமே யரிய.‘
சூளா. 271. வேலுக்கு மாலை சூடுதல் மரபு. மாலை - இயல்புமாம். துகள் - அற்பம் என்னும்
பொருளது. (42)
262. |
ஆகவெனி னாகுமிவ1
ரழிகவெனி னழிப2 |
|
மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின் |
|
ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும் |
|
மாகமழை
வண்கைமத யானைமணி முடியோய். |
(இ-ள்.)
மாக மழை வண்கை மத யானை மணிமுடியோய் - வானத்துள்ள மழைபோன்று கொடுக்கும் கையையும்
மதத்தோடு கூடிய யானையையும் மணிமுடியினையுமுடைய வேந்தே, இவர் - இம்முனிவர், ஆக எனின்
ஆகும் - ஒரு பொருளைக் குறித்து இது) விருத்தி அடைக என்பாராயின் அங்ஙனமே விருத்தியடையும்:
அழிக எனின் அழிப-
1
னாகவிவ.
2
ரழிய வெனி லழிக. |
|