இம்முனிவரரை வணங்கி நன்மை பெறுக என்றானென்க.
மன்னுயிரைத் தம்முயிர்போல் கருதுதல் பெரியோர்க்கியல்பு.
அவ்வியம் அன்பின்மையின் நிகழும் மனக்கோட்டம். (சீவக. 394ல்) ‘அவ்வியம்-மனக்கோட்டம்’
என்ற உரை காண்க. கடத்தல் - நீக்குதல். உயி்ர் விளங்குதல், சுத்தாத்மத் தன்மையைப்
பெறுதல். (46)
266. |
என்றினிது கூறும்வணி கன்சொலிக ழாதே |
|
கன்றுசின முங்கர தலப்படையு மாற்றி |
|
இன்றிவனை யென்னைதொழு மாறளியன் யாவன் |
|
கன்றுதுக டுன்றுகரு மேனியின னென்றான். |
(இ-ள்.)
என்று இனிது கூறும் வணிகன் சொல் - என்றிவ்வாறு இனிமை பெறக் கூறும் வணிகனது நற்போதனையை,
இகழாது - (மன்னன்) இகழாது மேற் கொண்டு, கன்று சினமும் கரதலப்படையும் மாற்றி - மனத்துட்கொண்ட
கடுஞ்சினத்தையும் கையிற்பிடித்த வாளையும் நீக்கி, கன்று துகள் துன்று கரு மேனியினன்
- மிக்க புழுதிபடிந்து கறுத்த மேனியினனாகிய, அளியன் யாவன் - அளிக்கத் தக்க இம்முனிவன்
யாவன்? இன்று - இப்போது, இவனை - -, தொழுமாறு என்னை - யான் தொழுவது எங்ஙனம்?
என்றான் - என்று வணிகனை) வினாவினான். (எ-று.)
அம் முனிவன் யாவனென்றும் அரசனாகிய தான் வணங்குவது
எங்ஙனம் என்றும் வினாவினானென்க.
கன்றல் - மிகுதல் கரதலம் - வடசொல். அளியன் - இரங்கத்
தக்கவன்: எளியன் என்றுமாம், துன்றுதல் - படிதல், மாற்றல் - கோபத்தைத் தணித்தல்,
வாளை உறையிற் செருகல்.
(47)
267. |
இங்குலகு தொழுமுனியை யாவனெனி னிதுகேள் |
|
கங்கைகுல திலகனிவன் கலிங்கபதி யதனைப் |
|
பொங்குபுய வலியிற்பொது வின்றிமுழு தாண்ட |
|
சி்ங்கமிவ னென்றுதெளி தேர்ந்துணரின் வேந்தே. |
|