- 282 -

(இ-ள்) வேந்தே - --, இங்கு உலகு தொழும் முனியை - இவ்வுலகில் உயர்ந்தோர் வணங்கும் இம்முனிவரரை, யாவன்எனின் - யாவனென அறிய வினவுவை யாயின், இது -யான் கூறுமிதனை, கேள்  - --, தேர்ந்து உணரின் -  ஆராய்ந்தறியுமிடத்து, இவன் - --, கங்கைகுதிலகன்-கங்கைகுலத்திற் பிறந்த மன்னருட் சிறந்தவன்:   கலிங்க பதி - கலிங்க தேசத்தையாளும் மன்னன், அதனை - அக்கலிங்க தேசத்தினை, பொங்கு புயவலியில் - சிறந்த தன்தோள்வலியால், பொதுவு இன்றி முழுதும் ஆண்ட இவன் -வேற்றரசர்கட்குப் பொதுவின்றித் தானே முழுவதும் (ஏகசக்ராதிபனாய்) ஆட்சி புரிந்த இவன்,  சிங்கம் என்றுதெளி - (பகையரசர்களாகிய யானைகள் அஞ்சத்தக்க)  சிங்கம்போன்றவன் என்று தெளிவாயாக.  (எ-று.)

இம்முனிவன், கலிங்கநாட்டின் அரசன் என்றானென்க. கலிங்க பதியதனை -கலிங்கநாட்டை என்றுமாம்.  பதி - நாடு: ‘பொதுக்கடிந்தாள்க‘ என்றார் தோலா மொழித்தேவரும்.

இதுமுதல் ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு

முனிவர்பெருமையைத் தெளிவிக்கின்றான்

268.  மேகமென மின்னினொடு வில்லுமென வல்லே
  போகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே
  ஆகதுற வருள்பெருகு மறனொடத னியலே
  போகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான்.

(இ-ள்.) ‘மேகம் என - மேகம்போல, மின்னினொடு வில்லும் என - மின்னலும் இந்திரவில்லும்போல,  போகமொடு பொருள் இளமை - போகமும் பொருளும் இளம்பருவமும், நனிவல்லே பொன்றும் என்று - மிக விரைவாகக் கெடும் என்று கருதி, துறவு ஆக - நான் துறப்பேனாக:(அத்துறவினால்) அறனோடு அருள்பெருகும் - நல்லறத்தோடு அருளும் மிகும்:  அதன் இயலே - அதன் இயல்பினால், போகம் மிகு பொன்உலகு புகுவன் - போகம் அதிகமாயுள்ள வானுலகின் (மகர்த்திக) தேவ பதவியை எய்துவேன்,‘ என நினைவான் - என்று (அவ்வேந்தன்) கருதினான்.