- 284 -

எனவும், ‘தலைப்பட்டார் தீரத் துறந்தார்‘  எனவும், (குறள்,344, 348.)  தேவர் கூறியது அறிக. (50)

270.  வானவரும் மண்ணின்மிசை யரசர்களும் மலைமேல்
  தானவரும் வந்துதொழு1 தவவுருவு கொண்டான்
  ஊனமன2 மின்றியுயிர் கட்குறுதி யுள்ளிக்
  கானமலை3 நாடுகள்க லந்துதிரி கின்றான்.

(இ-ள்.) (இம்முனிவன்), வானவரும் மண்ணின் மிசைஅரசர்களும் மலைமேல் தானவரும் - தேவர்களும் இவ்வுலகத்திலுள்ள அரசர்களும் மலைமேல் வாழும் தானவர்களும், வந்துதொழு - வந்து வணங்குகின்ற, தவ உருவு கொண்டான் - தவவேடம் பூண்டவனாகி, மனம் ஊனம் இன்றி - உள்ளத்தில் பற்று முதலிய குற்றமின்றி, உயிர்கட்கு  உறுதிஉள்ளி - உயிர்களுக்கு நன்மை புரிதலை நினைத்து,  கானம் மலை நாடுகள் கலந்து திரிகின்றான் - காடு மலை நாடுகள் இவற்றில்  (முனிவர்க்குக் கூறிய   இலக்கணத்தின்படி) ஓரிடத்தும் நீடிக்காது செல்கின்றவ னாயினான்.  (எ-று.)  

இம்முனி, யோகம் சரியைக் கேற்றவாறு அவ்வவ்விடங்களில் தங்கிச் செல்வானாயின னென்க.

மிசை - மேல்;  ஏழனுருபு.  மலை - வெள்ளிமலை. விஜயார்த்த கிரி எனவும்  வழங்கும்.  தானவர்  - வித்யாதரர். இம்மலையில் வாழும் மாந்தர் வித்யா தேவதைகளின் துணையால் வானில் இயங்குந் தன்மையுடையர்:  அதனால்  வித்யாதரர் என்ற பெயர் பெற்றனர்.  இதன் விவரம்,  சூளாமணி மேருமந்தரம் முதலிய நூல்களில் காண்க.   (51)

271.  யானுமல தெனதுமல திதமுமல தென்று
  மானமுடை மாதவனின் மேனிமகி ழானாய்
  ஏனைவினை மாசுதன துருவினிறு வாதே
  ஞானவொளி நகைசெய்குணம் நாளுமணி கின்றான்.

(இ-ள்.) மானம் உடை மாதவன் - தவப்பெருமையுடைய சிறந்த தஷ்வியாகிய இவர், இன்மேனி-(தமது) நல்ல

 

1 தொழ

2 ஊனமெனு

3 கானுமலை.