திருமேனியை, யானும் அலது-(இது) என் ஆத்ம ஸ்வரூபம்அன்று, எனதும் அலது - என்னுடையதும்
அன்று, இதமும்அலது - நன்மை தருவதும் அன்று, என்று - என்று கருதி,மகிழானாய் -
(அதனை) விரும்பிப் போற்றாதவனாகி, ஏனைவினை மாசு - மற்றைத் தீவினைகளாகின்ற மாசு,
தனது உருவின் நிறுவாது - தனது ஆத்ம ஸ்வரூபத்தில் நிறுத்தாமல் (நிற்காதபடி செய்து),
ஞானம் ஒளி நகை செய் குணம் -ஞானஜோதியாகிய மகிழ்ச்சியைத் தரும் நற்குணங்களையே,
நாளும் அணிகின்றான் - எந்நாளும் அணிந்திருக்கின்றான்.
முனிவர் பெருமையை வணிகன் கூறினானென்க.
உயிரையும் அதன் குணங்களையும். ‘யானும் எனதும்‘ என்று குறிப்பிட்டான். ‘யானெனதென்னுஞ்
செருக்கறுப்பான் வானோர்க், குயர்ந்த வுலகம் புகும்‘ எனவும், ‘மற்றுந்தொடர்ப்பா
டெவன்கொல் பிறப்பறுக்க, லுற்றார்க் குடம்பு மிகை, எனவும், (குறள் - 346இ 345.)
தேவர் கூறியது ஈண்டு அறிதற்பாலன. துகள் துன்று கருமேனியினன்‘(266) என்று கருதிய வேந்தனுக்கு,
வினைத்துகளை நீக்கியமுனிவரர் உயிரினின்றும் அன்யமான உடலைப் போற்றிக் காத்தலை
வேண்டார் என்று தெரிவித்தானென்க. குணங்களை அணிகலனாகக்கூறும் வழக்கினை, ‘குணமணி...
யணிந்து‘(மேரு,421) என்று கூறுவதனாலறியலாகும்.(52)
272. |
ஈடின்முனி யோகினது பெருமையினி லிறைவ |
|
காடுபடு கொலையினொடு கடியவினை நின்னைக் |
|
கூடுவதா ழிந்ததுகொ லின்றுகொலை வேலோய் |
|
நாடுவதென் ஞமலியிவை நணுகலகள் காணாய். |
(இ-ள்.)
இறைவ - --, ஈடு இல் முனி - ஒப்பில்லாதஇம்முனிவரரின், யோகினது பெருமையினில் -
யோகத்தின்பெருமை (மஹிமை)யினால், காடுபடு கொலையினொடு கடியவினை-காட்டிடத்தே நின்னால்
உண்டாகுங் கொலைத் தொழிலோடு (அதனால் நேரவிருந்த) மிக்க தீவினையும், இன்று -
இன்றைக்கு, நின்னைக் கூடுவது ஒழிந்தது - நின்னைச்சாராது ஒழிந்தது: காலைவேலோய்
- கொல்லும் வேலையுடைய வேந்தே, நாடுவது என் -
|