பதையும்: உரையில், பாவங்கொட ப்ரதிக்ரமணம் சொல்லிப்படிவம்
நிற்றல் என்றிருப்பதையும் காண்க. ‘ நின்னுயிரை நீகளையின் இன்னருளதென்னாம்‘ என்று
பிரித்துப் பொருள்கூறலும் அமையும். இன்அருள் - யாவருக்கும் நன்மைசெய்யும் அருள்.
‘அருளது‘ என்பதில், ‘ அது‘ பகுதிப்பொருள் விகுதி என்று வழங்கும்.
(55)
275. |
முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப் |
|
பின்னுமிகை1
பிறவுமுரை2 பேசுதிற நினைவுந் |
|
துன்னுயிரின்3 முன்னிது
துணிந்தபிழை தூரப்4 |
|
பின்னைநினை கின்றவிது பிழைபெரிது மென்றான். |
(இ-ள்.) முன்னம்
உரைசெய்த பொருள் முடிந்திலது - முன்னர் (265 ல்) வணிகனால் கூறிய பொருள்இன்னம்
முடியவில்லை: முடிய - அது முடிவதற்கு, பின்னும்-மேலே, உரை பிறவும் பேசுதிறம் நினைவும்
மிகை - உரைக்க வேண்டிய பிற அறவுரைகளும் அதனை நினைக்கவேண்டிய தியானமும் மிகுதியாயுள்ளன
: (அவற்றைவிட்டு) முன் துன் உயிரின் இது துணிந்த பிழை - (நின்) முன்னர்த் தோன்றிய
எம்மை மாய்க்கக் கருதிய இப்பிழையை, தூர - தூர்க்கவேண்டி (பரிகரிக்கவேண்டி),
பின்னை நினைகின்ற இது - மீண்டும் நின்னை நீயே தற்கொலை புரிவதாகக் கருதுகின்ற
இது, பெரிதும் பிழை - பெரும் பிழையாகும், என்றான் - என்று முனிவரர் கூறினார்.
(எ-று.)
முனிவர் மன்னன் பிழைகளை எடுத்தோதினாரென்க.
‘முன்னம்‘ என்றது, 265-ல், ‘செவ்விமையி்ன் நின்றவர்
திருந்தடி பணிந்துன், வெவ்வினை கடந்து‘ என்று கூறியதனை நோக்கியாகும். மிகை -
அதிகம் திறம்-உறுதி. துன் - நெருங்கிய. ஏனையகொடிய தீயசெயல்களைவிடத் தற்கொலை
செய்துகொள்ள எண்ணுபவர்களும் செய்துகொண்ட
1
மிசை.
2
முள
3
துன்னவயின்,
துன்னியிரின
4
தூராப் |
|