- 296 -

அமிர்தமதியாயிருந்த உயிர் சென்று நாரகனாகப் பிறக்க, பிறந்த அவனை பழைய நாரகர்கள் துன்புறுத்தினாரென்க.

நரகங்கள் நாம் வசிக்கும் இப்பூமிக்குக் கீழே யிருக்குந்தாழ்ந்த இடமாதலின், ‘குழி’ என்றார்.  தேனிறாலை யொத்தநரகா வாசங்களுள் தோன்றித்  தலைகீழாக வீழ்தல் இயல்பாதலின்,  ‘வீ்ழ்ந்த’  என்றார்.  ஈண்டு: சுட்டார், போழ்ந்தனர், புடைத்தார் என்று கூறினமையின்,  உடல்  மீட்டும மீட்டும் ஒன்றாகக் கூடுமியல்பிற்றென்க.  அதாவது,  நாரகரின் உடல் எத்தனைப் பிளவாகக் கிழித்த போதிலும்  மரணமெய்தாது திரும்பவும் (பழையபடி) ஒன்று சேரும் என்பதாம்.  ‘எரிவெம்படையா லிவர் வீழ்ந்தெழலால்,  உறுவெந்துய ரல்ல துடம்பு விடார’  (மேரு, 942)  எனவும், ‘புடைத்திட வலறி யாற்றார் பொன்றினும் பொன்றல்செல்லார்‘  (சீவக. 2767) எனவும்,  ‘சாவ வரிது’ (யசோ.285) எனவும் கூறியிருப்பன காண்க. மூழ்தல் - பற்றுதல். தேவர்களும் நரகர்களும் வாழ்நாள் முடிவில் மரணமெய்துவ தல்லது, நம்மைப்போல் வாழ்நாள் நடுவில்   மரித்தல்(அபம்ருத்யு) இல்லை.  இதனை ‘ஒளபபாதிக சரமோத்தமதேஹா சங்க்யேய வர்ஷாயுஷோ நபவர்த்தியாயுஷ:’என்ற(தத், 86) சூத்திரத்தாலுணர்க. ‘முனியலரும் உளரோ’ என்றது, பகையல்லாத நாரகர்களும் பகைவர் போலத்துன்புறுத்துவதனை நோக்கியதாகும். (63)

283.  செந்தழலின் வெந்தசைக1 டின்றனைமு னென்றே
  கொந்தழலின் வெந்துகொது கொதுகென வுருகுஞ்
  செந்தழலி னிந்திதர்கள்2 செம்புகள் திணிப்ப
  வெந்தழலி னைந்துருகி விண்டொழுகு முகனே.

(இ-ள்.) (அந்நாரகனை நோக்கி),  செந்தழலின்  நிந்தி போதர்கள் - அனல் பொலும் சுடு சொற்களால் நிந்திப்பவர்க ளாகிய புராதன நாரகர்கள்,  செந்தழலின்  வெம்தசைகள் - தீயில் வெந்த புலாலை,  முன் தின்றனையே என்று - --,

 

1 செந்தசைகள் வெந்தனகள்.

2 னிந்திரர்கள்.