- 297 -

கொந்து அழலின் - எரிகின்ற அனலின், வெந்து - வெப்பமடைந்து, கொது கொதுகென உருகும் - மிகக்  கொதித்து உருகிய, செம்புகள் - செப்புப் பாளங்களை,  திணிப்ப -(கொடிற்றால் எடுத்து புதியநாரகன்) வாயில் புகுத்த,  வெந்தழலின் நைந்து உருகி - அந்த வெவ்விய  தீயினால் உருகி, முகன் விண்டு ஒழுகும் - (அவன்) வாய் பிளந்து நீராயொழுகும்.

புலாலுண்டதற்குச் சிக்ஷையடைவிக்க  வருந்தினாளென்க.  

முன் - முற்பிறவி.  ‘நிந்திதர்கள், - புராதன நாரகர்கள் -முகன் - வாய்:  வடசொல்.  முன்பு  புலாலுண்டவர் வாயில்காய்ந்த செம்பு திணிப்பதை,‘ மயரிகள் ...  புலைசுதேன்கள்ளையுண்டார், உயலுறா வகையிற் செம்பையுருக்கி வாய் பெய்கின்றார்‘ (மேரு, 947,) ‘வாளைமீன் றடிகள் தின்றார்வருகென வுருக வெந்த, வாளத்தைக் கொடிற்றி னேநதிப்பகுத்துவாய் புகுத்தலாற்றார்,  ஊளைகொண்டோடுகின்றார்.‘ (சீவக. 2768) என்னும் செய்யுட்களையும்  ஈண்டு  அறிக.வெந்தசை,  வெந்த தசை, கொத கொதவென  இரைந்து கொதித்த லியல்பு.  ஏ, பிரித்துக் கூட்டப்பட்டது. (64)

284.  கருகருக ரிந்தன னுருவி1 னொரு பாவை
  பெரு கெரியி னிட்டுருகு2 மிதுவுமினி தேயென்
  றருகணைய நுந்துதலு மலறியது தழுவி
  பொருபொருபொ ரிந்துபொடி3 யாமுடல மெல்லாம்.

(இ-ள்) கரு கரு கரிந்தனன் - (அனலால்) மிகக்கரிந்த மேனியினனான அந்நாரகனை,  பெருகு எரியின்இட்டு உருகும் - மிக்க அனலில் வைத்ததனாலுருகிய, உருவின் ஒரு பாவை - நல்ல வடிவினையுடைய ஒரு செப்புப்பாவையைக் காட்டி,  இதுவும் இனிதே என்று - முன்னம் பரபுருஷனை அணைந்த உனக்கு (அனலில் காய்ந்த)  இப்பாவையும் இனியதே யாகும் என்று சொல்லி,  அருகு அணைய நுந்துதலும் -

1 லுருவி, ளுருவி.

2 லிட்டுருக.

3 பொரிந்தபொடி.