அருகு சென்று
தழுவத் தள்ளுதலும், அலறி அது தழுவி - அலறிக்கொண்டே அப்பாவையைத் தழுவி, உடலம் எல்லாம்
- உடம்பெல்லாம். பொரு பொரு பொரிந்து பொடிஆம் - பொரு பொரு வெனப் பொரிந்து
பொடியாகி வீ்ழ்ந்து துன்புறுவானாயினான்.
அமிர்தமதி,
நரகத்தில் புராதன நராகர்கள் ஏவலால் பாவையைத் தழுவித் துன்புற்றாளென்க.
தீய
காமத்தால் விளைந்த தீவினைக்கு நரகத்தில் செப்புப்பாவையைத் தழுவச் செய்வராதலின்,
‘பாவை‘ செப்புப்பாவையெனப் பட்டது. ஈண்டு, ‘சூழ்ந்தவருருக்கும் செம்பின் குட்டுவத்
துடம்பு காட்டி‘ (மேரு.888) என்றும், ‘ஒள்ளழற் செப்புப் பாவை, ஆதகா தென்னப்புல்லி
- (சீவக. 2769) என்றுங் கூறியவற்றால் அறியலாகும். ‘ கருகரு,‘ ‘பொரு பொரு‘ இரட்டைக்
கிளவி. இவை தனியேகரு, பொரு என்று வழங்குதல் இல்லை.
(65)
285. |
நாவழுகி வீழமுது1
நஞ்சுண மடுத்தார |
|
ஆவலறி யதுவுருகி யலமரினு மையோ |
|
சாவவரி திவணரசி2
தகவில்வினை தருநோ |
|
யாவும்விளை நிலமதனி னினியவுள3
வாமோ. |
(இ-ள்.)
(அந்நாரகனுக்கு), அமுது - உணவாக, நா அழுகி வீழ் நஞ்சு - நா அழுகி
வீழும் விஷத்தை, உணமடுத்தார் - உண்ணுமாறு ஊட்டினார்கள்: அது ஆ அலறிஉருகி - அந்நரகவுயிர்
ஆ என்று அலறி அவ் விஷத்தால் உருகி. அலமரினும் - சுழல்வுற்றாலும்: சாவ அரிது -
இறத்தல் இல்லை: இவண் - இவ்வுலகத்தில், அரசி - அரசியாயிருந்த அமிர்தமதி செய்த,
தகவு இல் வினை - தகுதியற்றதீவினைகள், தரும் நோய் யாவும் விளை நிலம் அதனில் -
பலனாகக் கொடுக்குந் துன்பங்கள் எல்லாம் விளையும் நில
1 வீழ்முழுது.
2 இவணரக
3 லினிய. |
|