- 299 -

மாகிய அந்நரகில், இனிய உளவாமோ - (அணுவளவாகிலும்) இன்பந் தருபவை இருக்குமோ?  இல்லையென்றபடி.

நாரகனுக்கு உணவாக விஷத்தை ஊட்டினர் என்க.

நாரகர்க்கு விஷம் உணவாதலை, ‘கணமு மிடையின்றியெழும் பசியால்,  உணவென்றென வந்துலகத்துள நஞ்சு, இணையில்லென‘ என்னும் (மேரு, 944ம்) கவியால் அறியலாகும். நரகப் பிறப்பில் உள்ள உயிர்களெல்லாம், ‘அலிகளே‘ (தத்வார்த்த, 2 : 50) ஆதலின், ‘அது‘ என்று அஃறிணையாகக் கூறினார்.  இனி இவர்களையே (வடமொழியில் ஜீவன் என்பது ஆண்பாலாதலின்) நரகன் என ஆண்பாலாக வழங்குவதும் மரபு.  ஆசிரியர் இரக்கத்தால் ‘ஐயோ’ என்றார்.

286.  முன்னுநுமர் தந்தசை முனிந்திலை நுகர்ந்தாய்க்
  கின்னுமினி துன்னவய வங்கடின லென்றே
  தன்னவய வம்பலத டிந்துழல வைத்துத்
  தின்னவென நொந்தவைக டின்னுமிகைத் திறலோய்.

(இ-ள்) மிகை திறலோய் - மிக்க வலிமையுடையமன்னவ !  முன்னும் நுமர் தம் தசை - முன்னர்  நும்உறவினரின் ஊனை,  முனிந்திலை நுகர்ந்தாய்க்கு - வெறுப்பின்றி புசித்த உனக்கு (இப்பொழுது), உன் அவயவங்கள்தினல் - நின் அவயவங்களைத் தின்பது, இன்னும் இனிதேஎன்று - அதைவிட இனிதாகுமென்று இகழ்ந்து, தன் அவயவம் பல உழலத் தடிந்து - அந்நாரகனின் பல உறுப்புக்களை அவன் துடி துடிக்க அரிந்து, வைத்து - அவன் வாயில் நுழைத்து, தின்ன என - தின்பாயாக என்று  துன்புறுத்த, நொந்து - மனம் நொந்து,  அவைதின்னும் - அவ்வுறுப்புக்களைத் தின்னும்.  நேர்ந்து என்றும் பாடம்.

தமர்புலாலையுண்ட தீவினையால் அந்நாரகன் தன் அவயவத்தைத் தானே தின்றனனென்க.

நுமர்தசை என்றது, எருமையாயும் ஆடாயும் பிறந்திருந்த மாமி, கணவன் இவர்களின் ஊனை: (யசோ.215.)