287. |
திலப்பொறியி னிட்டனர்தி ரிப்புவநெ
ருப்பின் |
|
உலைப்பெரு கழற்றலை யுருக்கவு முருத்துக் |
|
கொலைக்கழுவி னிட்டனர் குலைப்பவுமு
ருக்கும் |
|
உலைப்பரு வருத்தம துரைப்பரிது கண்டாய். |
(இ-ள்.) (அந்நாரகனை), உருத்து - (பழைய நாரகர்கள்) வெகுண்டு,
திலப்பொறியின் இட்டனர் திரிப்பவும் - எள் அரைக்கும் யந்திரத்தில் (காணத்தில்)
இட்டு அரைக்கவும்: நெருப்பின் உலை பெருகு அழற்றலை உருக்கவும்-(கொல்லன் உலைபோலும்)
நெருப்பையுடைய உலையில் மிக்குள்ள அழலில் இட்டு உருக்கவும்: கொலை கழுவின் - கொலைபுரியும்
கழுமரத்தின், இட்டனர் - இட்டவர்களாய், குலைப்பவும் - அழிக்கவும். முருக்கும் -
(தன்னை) அழியக் செய்த, உலைப்பரும் வருத்தம் அது - போக்குதற்கரிய அவ்வருத்தத்தினை,
உரைப்ப - சொல்ல அரிது - இயலாது.
செக்கிலிட் டரைத்தல் முதலாகிய அந்நராகன் எய்திய
பல துன்பங்களை உரைக்க இயலாது என்றனரென்க.
திலம் - எள். ‘செக்குரலிடைப் பல திலத்தினெரிகின்றார்‘ (மேரு. 955.) என்றும்,
‘கும்பி தன்னுள் கொந்தழலழுத்தியிட்டு நவிகுவர்‘ (சீவக. 2770) என்றும், ‘கழுவிலேற்றி‘
(சீவக, 2766) என்றும் கூறியன, ஈண்டு ஒப்பு நோக்கற்பாலன. இட்டனர், முற்றெச்சம்.
அழற்றலை:தலை, ஏழனுருபு. கண்டாய் - முன்னிலையசை : (68)
288. |
ஒருபதினோ டொருபதினை யுந்தியத
னும்பர் |
|
இருபதினொ டைந்துவி லுயர்ந்தபுகை
யென்றும |
|
பொருவரிய துயரினவை பொங்கியுடன்
வீழும் |
|
ஒருபதினொ டெழுகடல்க ளளவு மொளித்
தாரோய். |
(இ-ள்.)ஒளிதாரோய் - ஒளி தங்கிய மாலையணிந்தமன்னவ !
ஒரு பதினொடு ஒருபதினை உந்தி அதன் உம்பர் - ஒரு பத்தோடு ஒரு பத்தினைப் பெருக்கிய
தொகையின் மேல் (நூற்றின்மேல்), இரு பதினொடு ஐந்துவில் உயர்ந்த - இருபத்தைந்து
(நூற்றிருபத்தைந்து) வில்லளவினவாக உயர்ந்தனவாகிய, பொரு அரிய துயரின் அவை - ஒப்பில்லாத
|