எய்தக்கடவாதாகிய துன்பத்திற்கு
முடிவுதான் யாதாகுமோ! அருளுக என்ன - தெளியவுரைப்பீராக என்று, கலங்கினான் வீழ - மனங்கலங்கி
அவர்திருவடிகளில் வீழ்ந்து வணங்க, அம் மாதவன் - அந்தப் பெருமையுடைய முனிவரர். மாவல
- குதிரையினை நடத்துதலில் வல்லவனே, அஞ்சல் என்று - அஞ்சாதே யென்று அபயமளித்து,
உரை வளர்த்தான் - மேலும் சொல்லத் தொடங்கினார். (எ-று.)
வணங்கிய மன்னனுக்கு முனிவர் அபயமளித்தாரென்க.
பலியிடத் தூண்டிய சந்திரமதியையும்
உட்படுத்தி ‘வதைசெய்தார்‘ என்று பன்மையாகக் கூறினார். ஏதும்-ஒன்றுக்கும். அவதி
- எல்லை. காவல-எவ்வுயிர்க்கும் ரக்ஷகரேஎனவுமாம். கலங்கினன், முற்றெச்சம். மா -
யானையுமாம்.
299. |
அறிவில ராய காலத் தமைவில செய்த1
வெல்லாம்2 |
|
நெறியினி லறிவ தூற நின்றவை விலகி
நிற்பர் |
|
அறியலர் வினைக ளாலே யருநவை படுநர்க்
கைய3 |
|
சிறியநல் வதங்கள் செய்த திருவினை
நுமர்கட் காணாய். |
(இ-ள்.) ஐய - ஐயனே! அறிவு இலர் ஆய காலத்து
- மக்கள் நல்ல அறிவு இல்லாதவராயி்ருந்த காலத்தில், அமைவு இல செய்த எல்லாம்
- தகாதவற்றைக் கருதிச் செய்த செயல் முதலிய யாவும், நெறியினில் அறிவது ஊற - (புனித)
ஆகம நெறியில் நல்லறிவு வளரவே, நின்ற அவை விலகி -(தீயசெயலால் முன் பந்தித்து)
நின்ற அத்தீவினைகள் (உபஸ்மமெய்திப் பயனளிக்காமல் அடங்கி) விலக, நிற்பர்
- (இன்பத்தில்) நிலைபெறுவர்: அறியலர் - அறத்தின்திண்மை அறியாமல், வினைகளால்
- (செய்த) தீவினைகளினால், அருநவை படுநர்க்கு - பொறுத்ததற்கரிய துன்பமுற்றவர்களுக்கு,
சிறிய நல் வதங்கள் செய்த - அணுவிரதங்கள் அருளிய, திருவினை - நன்மையை, நுமர்கண்
காணாய் - நும்மவரிடத்தே கண்டு தெளிவாயாக. (எ-று.)
ஞானம் எய்தினவர் தீவினை யகல்வ ரென்றாரென்க.
1 அறிவில செய்த.
2 தெல்லா.
3 ஐயா. |
|