|
அருளின துருவ மாய வடிகணும் மடிகட்
கேயுந் |
|
தெருளல னினைந்த தீமைச் சிறியனே
னென்செய் கேனோ. |
(இ-ள்.)
அருளொடு படர்தல் செய்யாது - (உயிர்களிடம்) அருளோடு நடக்காமல்,
பொருளொடு போகம் மேவி - பொருளையும் போகத்தையும் விரும்பி, ஆர் உயிர்க்கு அழிவுசெய்து
- உயிர்களை வதைத்து(த் தீவினையெய்தி), பொறி இலேன் - நல்லூழ் இல்லாத யான்,
என் செய்கேனோ - யாது செய்வேனோ! அருளினது உருவம் ஆய அடிகள் - கருணையே வடிவா யமைந்த
சுவாமியே! நும் அடிகட்கேயும் - நும் திருவடிகளுக்கும். தெருளலன் தீமை நினைந்த சிறியனேன்
- தெளிவில்லாமல் தீங்கு நினைந்த அற்ப அறிவினேனாகிய யான், என் செய்கேனோ:-!
உயிர்களைக் கொன்று உமக்கும்
இன்னல் நினைந்த யான் உய்யுமாறு எங்ஙனமென்று யசோமதி வருந்தினானென்க.
அறம் பொருள் இன்பம் இம்மூன்றிலும்
நெறிமாறிக் கருணையின்றி உயிர்க்கு அழிவுசெய்தவ னாகலின், ‘அருளொடு... பொறியிலேன்,
என்றான். பொறி - பூர்வ புண்ணியமுமாம், கொல்லச் சூழ்ந்த தன்னையும் உய்யக் கொண்டாராதலின்,
‘அருளின துருவமாய அடிகள்‘ என்றான். ‘இன்னா செய்தார்க்கு மினியவே செய்யாக்கால்,
என்ன பயத்ததோ சால்பு‘ என்பது மறை. (குறள். 987). நினைந்த தீமை - வடமொழி நடை.
(78)
298. |
மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார்
வண்ண மீதே |
|
ஆவினி யளிய னேது மஞ்சிலே னவதி
யென்கொல் [ல் |
|
காவல
வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ |
|
மாவல
வஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான். |
(இ-ள்.) அரசன் - யசோமதி, காவல -
அடியேனை ரக்ஷித்தவரே, மா இயல் வடிவு தன்னை - மாவினால்செய்த கோழியினை, வதைசெய்தார்
வண்ணம் ஈது ஏல் - பலியிட்டவர் அடைந்த தன்மை இதுவாயின், ஆ - ஐயோ! அளியன் ஏதும்
அஞ்சிலேன் - இரங்கத்தக்க அடியேன் சிறிதும் அஞ்சினேனில்லை: இனி அவதி என் கொல்
- (யான்) இனி
|