பக்க எண்: - 306 -


ருசியும் அபயமதியும்), மாற்றிடை சுழன்ற பெற்றி - (பல) பிறவியில் உழன்ற தன்மையை,  சிந்தையில் நினைந்து நொந்து - மனத்தில் எண்ணி வருந்தி, தேம்பினர் புலம்ப- விம்மியழுது புலம்ப, கண்டு - பார்த்து,  கொந்து எரிஅழலுள் வீழ்ந்த கொள்கையன் ஆனான் - மூண்டு எரிகின்ற தீயில் வீழ்ந்த செயலையுடையனாயினான்.  (எ-று.)

தம் மக்கள் பழம்பிறப்புணர்ந்து வருந்துதலைக் கண்ட அரசன் மிக்க துயரெய்தினானென்க.

முக்திக்கு மாறாகியது,  ‘மாற்று‘ (பிறவி) எனப்படும்.

296.  எந்தையு மெந்தை தாயு மெய்திய பிறவி தோறும
  வெந்துயர் விளைவு செய்த வினையினே னென்செய் கேனோ
  அந்தமி லுயிர்கள் மாய வலைபல செய்து நாளும்  [கேனோ.
  வெந்துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தே னென்செய்.

   (இ-ள்.) எந்தையும் எந்தை தாயும் எய்திய - என் தந்தையும் அவன் தாயும் அடைந்த, பிறவிதோறும் - மயில் முதலிய ஒவ்வொரு பிறவியிலும், வெம் துயர் விளைவுசெய்த-(அவர்களுக்குக்) கொடுந்துன்பஞ்செய்த,  வினையினேன் -தீவினையாளனாகிய யான்,  என்செய்கேனோ - உய்வதற்குயாது செய்வேன் ! அந்தம் இல் உயிர்கள்  - எண்ணுதற்கு முடியாத பிராணிகள், மாய - மடிய, நாளும்  - எந்நாளும், அலை பல செய்து - கொலை முதலிய பல தீயசெயல்  புரிந்து, வெம் துயர் நரகின் வீழ்க்கும் வினைசெய்தேன் -  கொடிய துன்பம்தரும் நரகத்தில் வீழ்த்தும் தீவினைகள் செய்தயான், என் செய்கேனோ - இனி யென்செய்வேனோ ! (எ-று.)

யசோமதி தன் செயலைக் குறித்து வருந்தினானென்க.

எந்தை - என்தந்தை.  நாய், மீன் முதலிய பிறவிகளில் துன்புறுத்தியதனை நினைத்து, ‘எந்தையும்... வினையினேன்‘ என்றான். அலைத்தல் - வருத்துதல். தான்செய்த தீவினை நரகத்திற்கேதுவாகு மென்று எண்ணி மிகவருந்தினான்.

297.  அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க் கழிவு செய்தே
  பொருளோடு போக மேவிப் பொறியிலே னென்செய் கேனோ