- 305 -

நின்றதாகக் கொண்டு, ‘முனி ஏதுவின் அருளும் மொழி‘ என்று கூட்டிப் பொருள் கூறலும் ஆம். ஏது - ஹேது. விதிர்வு - நடுக்கம்:  விதுவிதுப்பு - இரட்டைக் கிளவி. நெகிழ்தல்.  தளர்தல் ; இளகுதல்.

294.  ஆங்கபய வுருசியுட னபயமதி தானுந்
  தாங்கலர்கள் சென்றுதவ வரசனரு ளாலே
  நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார்
  ஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார்.

(இ-ள்.) ஆங்கு - அம்முனிவரிடத்தே, அபயவுருசியுடன் அபயமதியும் - --, தாங்கலர்கள் சென்று -(நிகழ்ந்த வரலாறு அனைத்தையும் தூதுவர்மூலம் அறிந்து துன்பத்தைத்) தாங்க முடியாதவர்களாய்ச் சென்று,  தவ அரசன் அருளால் - தவத்தோர்கட்குத் தலைவராகிய சுதத்தாசார்யரை வணங்கி அவர் கூறியருளிய அறவுரையால்,  நீங்கியபவங்களை - (தாங்கள் துய்த்தலாற்) கழிந்த பிறவிகளை, ஆங்கு - அப்பொழுது (தமக்கெய்திய பழம்பிறப்புணர்வால்), நினைந்தனர் உணர்ந்தார் - நினைந்து  உணர்ந்தனர் (அதனால்), அவர்கள்  - அவ்விருவரும், உறும் கவலை-உற்ற துன்பத்தை,  யாவர் பிறர் அறிவார் - (இறைவனே யன்றி) அறியவல்லவர் வேறு யாவருளர்? (எவருமில்லை): (எ-று.)

அபயருசியும் அபயமதியும், பழம்பிறப் புணர்வினால் தங்கள் பிறப்பை அறிந்து அஞ்சி வருந்தினரென்க.

வினைப்பகையை செல்லும் தவத்தரசனுமாம்.  தான், சாரியை.  ஏ - அசை.                                                      (75)

295.  தந்தையும் தந்தை தாயு மாகிய தழுவு காதல்
  மைந்தனு மடந்தை தானு மாற்றிடைச் சுழன்ற பெற்றி
  சிந்தையி னினைந்து நொந்து தேம்பினர் புலம்பக் கண்டு
  கொந்தெரியழலுள் வீழ்ந்த கொள்கையன்மன்ன னானான்.

(இ-ள்.) மன்னன் - யசோமதி, தந்தையும் - (தனக்குத்) தந்தையும், தந்தை தாயும் ஆகிய - தந்தைக்குத் தாயுமாயிருந்த, காதல் தழுவும் மைந்தன்உம் மடந்தைஉம் - அன்பினால் தழுவுகின்ற புதல்வனும் புதல்வியும்  (அபய