சந்திரமதியும் இப்போது அபயமதியாயினா
ளென்க.
உடன் என்பதைத் தனியே பிரித்து,
தன்மகன் பிறந்துள்ள வராணத்தோடு என்றும் பொருள் கூறலாம். முனி - சண்டகருமனுக்குக்
கோழிகளின் பிறப்பைக் கூறியவர்.
293. |
இதுநுமர்கள் பவம்வினை1
கள் விளையுமியல் பிதுவென் |
|
றெதுவின்முனி யருளுமொழி யவையவைகள்
நினையா |
|
விதுவிதுவி திர்த்தக2
நெகிழ்ந்துமிகை சோரா3 |
|
மதுமலர்கொள்4
மணிமுடிய மன்னவன் மருண்டான். |
(இ-ள்.)
மது மலர்கொள் மணி முடிய மன்னவன் - தேனுள்ள மலர்புனைந்த ரத்ன கிரீடத்தையுடைய யசோமதியரசன்,
‘நுமர்கள் பவம் இது - முன்னோ ரெய்தியபிறவி வகை இது, வினைகள் விளையும் இயல்பு
இது- இரு வினைகளால் பயன்தரும் தன்மை இதுவாகும்’, என்று
--, எது இல் முனி அருளும் மொழி - (விருப்பு வெறுப்பு) யாதும் இல்லாத சுதத்தமுனிவர்
அருளிய மொழிகளால், அவை அவை நினையா - தன் பெற்றோர் முதலியோர் அடைந்த அவ்வப்
பிறப்புக்களை நினைத்து, விதுவிது விதிர்த்து - மிக்க துக்கத்தால் நடுநடுங்கி, அகம்
நெகிழ்ந்து - மனம் இளகி, மிகை சோரா - மிகுதியாய்ச் சோர்ந்து, மருண்டான் - மயக்க
மெய்தினான். (எ-று.)
அரசன், முனிவர் கூறியதை எண்ணி
நடுநடுங்கிச் சோர்ந்து திகைப்புற்றானென்க.
‘அவையவைகள்’ என்றது,
யசோமதியின் தாய் நரகில் வருந்துதலையும், தந்தையும் பாட்டியும் இழிபிறவிகள் பலவற்றில்
பிறந்ததனையும் குறித்தது. நுமர் - நும்தமர்: முன்னோர். ‘பவம’ என்பதில்
உள்ள மகரமெய், குறுக்கம்: கால் மாத்திரை யளவில் ஒலிக்கும். எதுவும் இல்என்பதில்
உள்ள உம்மை தொக்கது. இனி, ஏது என்பது எது என்று குறுகி
1 பவவினை.
2 விதிர்ந்தக.
3 மிகசோர,
4 மதுமலர. |
|