குருவாணையால் சரியைக்கு வந்தவர் யாங்களேயென்றானென்க.
அனசனம் - உபவாசம். ‘அனசனத் தவத்தினோடருந்தவம்‘ என்றார்
வாமனமுனிவரும். ‘வில்லினதெல்லை கண்ணால் நோக்கி‘ வந்தவர் (யசோ.28) ஆதலின்.
‘மெல்லவந்தார்‘ என்றார். தம்மைப் பிறர்போல் கூறிவந்தவன் இறுதியில் உண்மை
வெளியிட்டான். இவ்வாறு கூறும் வழக்கினைச் சீவகசிந்தாமணி 395-7ல் காண்க. ஓர்
உடை உடுத்தவர் க்ஷுல்லகர் (கோவணம் மட்டும் உடுத்தவர்‘ஜலக்) என இன்றும் வழங்குவர்.
(91)
311. |
இணையது பிறவி மாலை யெமரது மெமது
மெண்ணின் |
|
இனையதுவினைகள்பின்னா ளிடர்செய்த
முறைமைதானும் |
|
இனையது வெகுளி காமத் தெய்திய வியல்பு நாடின் |
|
இனையது பெருமை தானு மிறைவன தறத்த
தென்றான். |
(இ-ள்.) எண்ணின்
- ஆராயுமிடத்து, எமரதும் எமதும் பிறவி மாலை - எம்தமர் எய்திய பிறவித்தொடர்பும்
எம்முடைய பிறவித்தொடர்பும், இனையது - இத்தகையதாகும்: வினைகள் பின்னாள் - தீவினைகள்
(தாம் பயனளிக்க வேண்டிய) பின்னைநாளில், இடர் செய்த முறைமைதான்உம் இனையது - துன்பம்
விளைத்த வகையும் இத்தகையது: வெகுளி காமத்து எய்திய இயல்பு நாடின் இனையது - சினம்
காமம் முதலியவற்றால் அடைந்த இயல்பை ஆராயுமிடத்து இத்தகையதாகும்: இறைவனது அறத்தது
பெருமை தான் உம் - இறைவனறத்தின் பெருமையும், இனையது - --, என்றான் - என்று அபயருசி
கூறினான். (எ-று.) -
தமதுபிறவிமுதலியவற்றின் இயல்பைக்கூறினானென்க.
எமர் - எம்தமர்: உறவினர். தேவ, நரக கதியை யெய்திய
அசோகனையும் சந்திரமதியையும் குறித்து எமர் எனவும், மயில் நாய் முதலிய பிறவியில்
எய்திய தம்மை எம தென்றும் கூறினான். பலி முதலியவற்றாலாய |