என்னும் - --, துறவினுக்கு அரசன் - மாதவத் தலைவர், இந்நாள்
- இன்று, அரும் கடி கமழும் - அருமையான மணம் வீசும், சோலை அதனுள் - இந்நகர்ப்புறம்பேயுள்ள
சோலையில், வந்து - சங்கமுடன் (குழாத்துடன்) வந்து, இனிது இருந்தான் - மகிழ்வோடு
தங்கியிருந்தார். (எ-று.)
சுதத்தமுனிவர் சங்கமுடன் இந்நகரின்கண் எழுந்தருளியுள்ளாரென்று
அபயருசி கூறினானென்க.
அருங்கல மும்மை - இரத்தினத் திரயம். அதிசயம் மனப்பர்யய
ஞானம் முதலிய அதிசயம்; (மேரு. 1100), நோன்மை - தவம். குழு - சங்கம், துறவிகளின்
கூட்டம். ‘பெறற்கரும்குணம்‘ ஏனையோரால் பெறுதற்கரிய குணம்: எண்பத்துநான்குலக்ஷம் குணங்களில்
குறையாத எனினுமாம். ‘வந்து மாநகர்ப் புறத்தோர் வளமலர்ப் பொழிலுள்விட்டு, (யசோ.24)
அனசனத்தவம் ஏற்றதும், இஞைர் சரியைக்குச் சென்றதும், சண்டகருமன் அவர்களைப் பிடித்துச்
சென்றதும் ஒருநாளிலேயே நிகழ்ந்தவனவாதலின், ‘இந்நாள் ' என்றார். நின்னாடு எனவும் பாடம். (90)
310. |
அனசன மமர்ந்த சிந்தை யருந்தவ
னிசோ மதிக்குத |
|
தனயர்க டம்மை நோக்கித் தரியலீர்
சரியை போமின் |
|
எனவவ ரிறைஞ்சி மெல்ல விந்நக
ரத்து வந்தார் |
|
அனையவ ராக வெம்மை யறிகமற் றரச
வென்றான். |
(இ-ள்.)
அனசனம் அமர்ந்த சிந்தை அருந்தவன் - அனசனத் தவத்தில் அமர்ந்த தூய சிந்தையின ராகியசுதத்தமுனிவர்,
இசோமதிக்குத் தனயர்கள் தம்மை நோக்கி - யசோமதியரசன்மக்களாகிய அபயருசி அபயமதி
என்னும் க்ஷுல்லக விரதிகளை நோக்கி (நீவிர்), தரியலீர் - அனசனதவத்தை மேற் கொள்கலீர்;
(ஆதலின்), சரியை போமின் என - சரியைக்குச் செல்லுங்கள் என்று கட்டளையிட, அவர்
- அவ்விருவரும், இறைஞ்சி- (தம் குருவை) வணங்கி, இந்நகரத்து - இந்நகரத்தினுள், மெல்ல
வந்தார் - (பிறஜீவன்கள் வருந்தாவண்ணம் நோக்கி) மெல்லென நடந்து வந்தனர்; அரச
- -- ! , எம்மை - எங்களை, அனையவராக - அவ்விருவருமே யாக, அறிக - அறிவாயாக,
என்றான் - என்று அபயருசி புகன்றான். (எ-று.) |