- 316 -

பன்னிருவகைத் தவத்தையும் தாங்குதல் அரிதாகலின், ‘‘அருந்தவம்’ என்றார். தவத்தின் விவரம் யசோ. 24 இன் உரையில் காண்க. அமர்தல் - பொருந்தலுமாம்.  சாற்றிய - ஆகமத்துக்கூறிய.  கீழ் நிலைகளின் குணங்களையும் விடாதுபற்றி நிகழ வேண்டும் என்னும் நியாயம் பற்றி, ‘மேன்மேல்‘  என்றார் எனினுமாம்.  சய்யமா சய்யமம் என்பது சம்யமாசம்யமம் என்பதன் திரிபு.  சய்யமா சய்யமம் - தேச சம்யத குணஸ்தானம்.  ‘சையமா சய்யமத்தில் தலை நின்றார்’  (மேரு.475) என்றதன் உரை காண்க. ‘வென்றவர் உருவம் ஏலார்.....    குல்லக வேடங்கொண்ட வள்ளலும் மடந்தைதானும்’ என்று (யசோ.27ல்) இவ்வாசிரியரே  கூறியிருத்த லால் இவர் க்ஷுல்லக வேடத்தர்நிலையாகிய பதினோராம் நிலையினை ஏற்றவர் என்பது வலியுறும்.  குணஸ்தானம் பதினான்களுள் ஐந்தாமது தேச சம்யத குணஸ்தானம் எனவும், அதன் உட்பிரிவாகிய சிராவக நிலை பதினொன்று எனவும், அவற்றுள் பதினொன்றாம் நிலையே க்ஷுல்லக வேடமுடையவராகிய உத்திஷ்ட பிண்ட விரதியர்நிலையெனவும் அறிக.  க்ஷுல்லகர் - உலக நோன்பிகள்;  (சிராவகர்) உபாசகர் என்பதுவும் இவர்களையே குறிக்கும்.  ஆற்றலது, ‘அது‘ - பகுதிப்பொருள் விகுதி.  சையமா சையமத்திற்கேற்ற எனவும் பாடம்.      (89)

309.  அருங்கல மும்மை தம்மா லதிசய முடைய நோன்மைப்
  பெருங்குழு வொருங்குசூழப் பெறற்கருங்குணங்கடம்மாற்
  கருங்கலில் சுதத்த னென்னுந் துறவினுக் கரச னிந்நாள்
  அருங்கடி கமழுஞ் சோலை யதனுள்வந் தினிதி ருந்தான்.

 (இ-ள்.) அருங்கலம் மும்மை தம்மால் - (நற்காட்சி நன்ஞானம் நல்லொழுக்கம் என்னும்) பெறற்கரிய மும்மணிகளால் (எய்தப்பெற்ற), அதிசயம்  உடைய - --, நோன்மைப் பெருங் குழு - தவப்பெருங் குழுவினர், ஒருங்கு சூழ - ஒருங்கே தம்மைச் சூழ்ந்து வர, பெறற்கு அருங்குணங்கள் தம்மால் - பெறுதற்கரிய நற்குணங்களினால், சுருங்கல் இலை - குறைதல் இல்லாத, சுதத்தன்