மெய்யாகவே, சினவரன் சரணம் மூழ்கி - இறைவன் திருவடிகளில்
பணிந்து, செறிதவம் படர்தும் என்றார் - (அவரருளிய) மிக்க தவத்தின் (வழியில்)
செல்லுவோம் என்றார். (எ-று.)
இளைஞர், முனிவரை வணங்கி, தீக்ஷை அருளுமாறு வேண்டினரென்க.
தன, வினையின என்பவற்றில், ‘அ‘ ஆறனுருபு.‘ இளைஞர் சென்ற
சமயத்தில் முனிவர் அறவுரை கூறிக்கொண்டிருந்தாரென்க.
(88)
308. |
ஆற்றல தமையப் பெற்றா லருந்தவ
மமர்ந்து செய்மின |
|
சாற்றிய வகையின் மேன்மேல் சய்யமா
சய்யமத்தின் |
|
ஏற்றவந் நிலைமை தன்னை யிதுபொழு
துய்மி னென்றான் |
|
ஆற்றலுக் கேற்ற வாற்றா லவ்வழி
யொழுகு கின்றார். |
(இ-ள்.)
(சுதத்தாசாரியர் இளைஞரை நோக்கி), ஆற்றல் அமையப் பெற்றால் - (நுமக்குத் தவம்
ஏற்றுச் செய்தற்குத்தக்க) வல்லமை அமையப்பெற்ற போழ்து, அருந்தவம் - அரிய தவத்தை,
அமர்ந்து செய்மின் - விரும்பிச் செய்யுங்கள்: சாற்றியவகையில் - (உலக நோன்பிகளுக்குக்)
கூறியவகையில், மேல் மேல் - ஒன்றன்மேல் ஒன்றாகவுள்ள, சய்யமா சய்யமத்தின் - தேச
சம்யத குணஸ்தானத்தில், ஏற்ற - (உங்கள் சக்திக்கு) ஏற்ற, அந்நிலைமை தன்னை -
உத்திக்ஷ்ட பிண்ட விரதம் என்னும் அப் பதினோராம் நிலையினை, இது பொழுது உய்மின்
- இப்பொழுது (ஏற்று) உய்யுங்கள் என்றான் - என்று அருள் செய்தார்; ஆற்றலுக்கு ஏற்ற
ஆற்றால் - (இளைஞரும் தங்கள்) சக்திக்குத் தக்கவாறு, அவ்வழி ஒழுகுகின்றார் - அப்பதினொன்றாம்
நிலையினதாகிய க்ஷுல்லக வேடத்தினை ஏற்று ஒழுகுவாராயினர். (எ-று.)
தேச சம்யத குணஸ்தானத்தின் வகைகளில் மேல் நிலையாகிய
பதினோராம் நிலையினை இப்பொழுது ஏற்று ஒழுகுங்கள் என்று கட்டளையிட அவ்விருவரும் அவ்வாறே
மேற்கொண்டனரென்க. ‘ஸக்திஸ்த்யாக தபஸி‘ என்பது (நீல. 143இன் உரை) விதியாகலின்,
‘ஆற்ற தமையப் பெற்றால் அருந்தவம் அமர்ந்து செய்மின்‘ என்றார்.
|