- 320 -

 (தத்பவம்), ‘திர்யக்‘ - கதி நான்கனுள் ஒன்று. அவை நாரக, திர்யக் மனுஷ்ய, தேவகதி என்பன.  மனிதர் தேவர் நாரகர் என்ற மூன்று பிரிவின் நீங்கிய ஈர்அறிவு உயிர் (1+2) முதல்  ஐயறிவு (5) வரையிலுமுள்ள நத்தை, எறும்பு, பறவை, மிருகம் முதலியன, திர்யக் எனப்படும். இது, விலங்கு என்று தமிழில் கூறப்படும்.  ‘மோகமே திரியக்கிடை யுய்ப்பது‘ (மேரு. 325) என்றார் வாமனமுனிவர். மாரிதத்தன் செய்தற்கிருந்த எண்ணிலா வுயிர்ப்பலிக்கு மாக்கோழியின் பலி மிகவும் அற்பமாகையினால் ‘ஒரு துகள்‘ என்றான். ‘மன்னுயிர்க் கொலையினாலிம் மன்னன் வாழ்கென்னு மாற்றம், என்னதாய் விளையுமென்றே நக்கனம்எம்முள்‘ என்றார்(யசோ.62) முன்னரும்.  உளைதல் -மனம் நோதல்.  திர்யக் என்றும் பாடம்.                           (93)

313.  ஐய நின்னரு ளாலுயிர்க் கொலையினி லருவினை நரகத்தாழ்ந்
  தெய்தும்வெந்துயரெனைப்பலகோடி கோடியினுறுபழிதீர்ந்தே
  பொய்ய தன்றிது புரவல குமரநின் புகழ்மொழி புணையாக (ன்
  மையின் மாதவத் தொருகடலாடுதல் வலித்தன னிதுவென்றான்.

(இ-ள்.) ஐய - ஐயனே, நின் அருளால் - உனது கிருபையினால், உயிர்க்கொலையினில் அருவினை - உயிர்களைக் கொல்வதனால் உண்டாகுந் தீர்கற்கரிய வினையினால், நரகத்து ஆழ்ந்து எய்தும் - நரகத்தில் அழுந்தி அடைகின்ற, வெம்துயர் - கொடிய துன்பங்கள், எனைப் பலகோடி கோடியின் உறும் - எத்துணையோ பலகோடிக்கணக்கில்  எய்தும், பழி - பழியின்நின்றும், தீர்ந்தேன் - நீ்ங்கினேன், புரவலகுமர - அரசகுமரனே, இது பொய்யதன்று - யான் கூறும் இது பொய்யானதன்று, நின்புகழ்மொழி - நீ கூறிய புகழ் சேர்ந்த உபதேசமொழியே, புணையாக - தெப்பமாக, மையில் மாதவத்து ஒரு கடல் ஆடுதல் இது - குற்றமற்ற சிறந்த தவமாகிய ஒப்பற்ற கடலில் ஆடித் திளைத்தலாகிய இதனை, வலித்தனன் - உறுதியாகக் கொண்டேன், என்றான் - --, என்று மாரிதத்தன் மொழிந்தான்.  (எ-று.)

மாரிதத்தன், இனி தவம் மேற்கொள்வே னென்றானென்க.