4.ஆரணி தச்சூர் மணியம் ஸ்ரீ M. பொன்னுசாமி நயினார் ஏடு 1
5.முதலூர் ஸ்ரீமான் ராசு வாத்தியார் வாங்கியளித்த ஏடு 1
6.நல்லியாங்குளம் ஸ்ரீமான். வாசுதேவ நயினார் ஏடு 1
7.வீடுர் தர்மசாம்ராஜ்ய சாஸ்திரி இளவல் பத்மராஜ நயினார் ஏடு 1

இவ் ஏழு ஏடுகளேயன்றி, காஞ்சீபுரம் பாகுபலி நயினார் வெளியிட்ட அச்சுப்பிரதி ஸ்ரீமான், வேங்கடராஜூலு ரெட்டியார் அவர்களாலும், திரு. வேங்கடராமய்யங்கார் வெளியிட்ட அச்சுப்பிரதி பேராவூர் ஸ்ரீமான், சனத்குமார் நயினார் அவர்களாலும் கிடைத்தன.  இவற்றையெல்லாம் ஒப்பிட்டு நோக்கி, பொருத்தமான பாடங்களை மேற்கொண்டேன் ;  அவசியமான சில இடங்களில் முதல் நூலை நோக்கி அதற்கு இயைபு உடைய பாடத்தைக் கிரகித்துள்ளேன் ; ஒரு சில இடங்களில், கன்னடமொழியில் கவி ‘ஜன்ன’ என்பவர் இயற்றியுள்ள யசோதரகாவியத்தையும் நோக்கியுள்ளேன்.  ஆயினும், ஒரு சில செய்யுட்களில் சரியான பாடம் விளங்கிற்றில்லை.  அவற்றுள் சில :  ‘மருளு மாசனம் வளர்விழி’ 219 ‘பின்னுமிகை பிறவுமுரை பேசுதிற நினைவுந் துன்னுயிரின்’ 275.  ‘அனசனர் குழாங்களுள் ‘ 315.

எனக்கு கிடைத்த பிரதிகளிலெல்லாம் 320 செய்யுட்களே உள்ளன.  ஆயின், பிள்ளையவர்கள் உரைப்புத்தகத்தில் 330 செய்யுட்கள் உள்ளன.  அதிகமாகயுள்ள செய்யுட்களில் கூறப்பட்டுள்ள பொருள்கள் முதல் நூலில் கூறப்படவில்லை.

இக்காப்பியத்திற்கு உரையெழுதத் தக்க அறிவும் ஆற்றலும் எனக்கு இல்லை யென்பதை அடியேன் நன்கு அறிவேனாயினும்,  பிள்ளையவர்களின் கடிதமும் இந்நூலில் வந்துள்ள சமயக் கொள்கைகளின் உண்மையை உலகிற்கு அறிவிக்கவேண்டும் என்னும் பேராவலும் உந்த, இச்செயலையான் மேற்கொண்டேன்.  என் அறிவிற் கியன்றவாறு உரையெழுதி முடித்த பின்னர், அதனைப் பரிசோதித்துத் தருமாறு, தமிழேயன்றி, தெலுங்கு மலையாளம் கன்னடம் முதலிய பல பாஷைகளிலும் தேர்ச்சிபெற்றவரும் சென்னை ‘யூனிவர்சிடி’ ஆராய்ச்சித் துறையில் அமர்ந்து பல அரிய ஆராய்ச்சி நூல்களையேயன்றி ஜைன நூலாகிய ஸ்ரீபுராணத்தை வெளியிட்டவருமாகிய உயர்திரு. வே. வேங்கடராஜூலு