viii

நன்னாவாகும். (51 - 145) திருவேகம்பம் சதாசிவ மூர்த்திமானாகிய பரமசிவன் எழுந்தருளியிருப்பது . அதைச் சுற்றிய திருமதில் பொன்மதில் எனப் போற்றப்பெறுகின்றது . பொன்மதில் என்பது இரு பொருளுடையது. அதனால், “கச்சி மூதூர் தரைமிசை உயிர்கள் செய்த கன்மம் ஓர்ந்து அளிப்பான் வந்த கதிர்செய் மண்டில மேயாம்” (89-123) “செய்வதும் தவிர்வதும்” என்று இருவகையவாம் அறங்கட்கெல்லாம் நிலைக்களம் காஞ்சியே, என்னை? உலகுயிர்க்கெல்லாம் இலகுதாய் ஆகி நிலவும் காமக்கோட்டியம்மையே இந் நகரில் வீற்றிருந்து முப்பத்திரண்டறத்தையும் வளர்த்துக் காட்டிய மாட்சி வேறு நகர்க்கு உண்டோ ? (89- 124) இக்காஞ்சியைப் புகழாத கவிவாணர் இலர். அவர் எல்லாரும் சொல்லாதவற்றைச் சொல்லவல்லாதேன் யான் என்று தம் அடக்கத்தை இரண்டு படலமும் கூறி முடிக்கும் வரையில் அடங்கியிருந்து வெளியிட்டருளினார் ஒளிவிட் டுலகெலாம் விளங்கும் உத்தமோத்தம் முனிவராகிய இந்நூலாசிரியர் மாதவச் சிவஞான யோகிகள். (90-125) இக்காஞ்சிப்புராணம் உத்தமக் காதை எனப்பெறும் உயர்ச்சியுடையது. (90-126) இவ்வுயரிய சிவபுராணத்தைப் பாடியருளும் ஆற்றல் சான்ற ஆசிரியர் தம்மை நமக்குணர்த்தியவாற்றை அறிந்து நாமும் அவ்வாறாய அடக்கம் உறத் தக்க பேற்றை எய்தல் வேண்டும்.

“எவ்வெவர் கோட்படு பொருளும் அஞ்செழுத்தின் அடக்கி அவற்றியல்பு காட்டி, மெய்வகை அஞ்சவத்தையினும் நிற்குமுறை ஓதுமுறை விளங்கத் தேற்றி, அவ்வெழுத்தின் உள்ளீடும் அறிவித்துச் சிவபோகத்து அழுத்தி, நாயேன் செய்வினையுங் கைக்கொண்ட வேலப்ப தேசிகன்றாள் சென்னி சேர்ப்பாம்.” (குரு வணக்கம் )

அமுதமும் கைப்ப அறிஞர் கழகந்தொறும் குழாம் குழாம் ஆகித் தமிழாராய்ச்சி புரியும் இக் காஞ்சியின் புகழ் எல்லைக்கு முடிவில்லை. “கொழிதமிழ் மறைப் பாடற்கிள்ளை பாடுசீர் காஞ்சி என்றும்” போற்றப்படுவது இது. காஞ்சித்திருநகர்ச்சிறப்பைத் திருவேகம்பப் படலத்தில் விளக்கம் உற அறியலாம்.

திருவேகம்பம்

திருமாமறையே ஒருமாமரம் (ஏகாம்பரம்). அவ்வேத பாதவத்தின் கீழ் ஆனந்தப்பேரொளியே சிவலிங்கம் ஆகத் தோன்றிற்று. அதன் இடப்பால் விளங்கும் தாயே லளிதாம்பிகையாகிய ஏவலார் குழலி, அவ்வம்மையப்பர் திருவடியே ‘வெம்பவக் கடலின் நின்று அருட்கரை விடுக்கும்’, காஞ்சி மரந்தரு நிழலில் மாந்தர் ஒரு சிறிது நேரம் நின்று வழிபட்டால் பிறவிப் பெருந்துயர் வெப்பம் எப்பொழுதும் மீண்டுறாது , ‘ஏகம்பநாதன் என்றுரைப்ப. ஆதிமந்திரம் அஞ்செழுத்து இதுவே, ஐம்பெருங்கொடும்பாதம் அறுக்கும். ஓதும் ஐ வகைப் பிரம மந்திரத்தும் அஞ்செழுத்தினும் உயர்ந்தது இம்மனு. எம்மனு? ‘ஏகம்பநாதன்’ என்னும் மனு. மவ்வும் னவ்வும் ஆகிய ஒற்று இரண்டும் கணக்