ix

கிடப்படாமையின் ‘ஏகம்பநாதன்’ என்பது அஞ்செழுத்து எனப் போற்றப் பெறும். அத்தகைய “ஏகம்பநாத மாமனுத்தான் நூறு கோடியின் மிக்கது”, அதனின் றாழ்ந்தனவே அஞ்சும் எட்டும் பனிரண்டும் ஆகிய எழுத்து மந்திரமும் அம்சமந்திரமும் காயத்திரியும் வேதமந்திரமும் ஆகும். இவற்றை ஒன்றனின் ஒன்று முறையே தாழ்ந்ததெனக் கொள்க. “இம்மனு அறப்பயன் பொருள் இன்பம் வீடு என்று அனைத்தும் ஓதுநர்க்கு அளிக்கும்” இன்னோரன்ன பல மாண்புகளைப் புராணத்துள் நுழைந்து நுணுகியாராய்ந்துணர்தல் சாலப்பயன் ஆக்கும்.

காமக்கோட்டம் குமரக்கோட்டம் கச்சபேசம் முதலிய தலங்கள் பலவற்றையும் குறித்த பெருமைகளை யெல்லாம் இப்புராணத்தில் தனித் தனியாக உள்ள படலங்களிற் காண்க, காமக்கோட்டத்திலே திசைமயக்கம் உண்டாகும். அங்கு நேரான திசையை அறிந்து காட்ட வல்லார் எவரும் இலர். திருக்களிற்றுப்படியாரில் தாரத்தோ டொன்றாவர் என்றதற்கு இத்தலமும், தாரத்தோர் கூறாவர் என்றதற்கு அம்மையப்பராக எழுந்தருளிக் காட்சிதரும் திருச்செங்கோடும் காட்டாக இருக்கும் தனிச்சிறப்புடையன. தாரத்தோர் கூறாகாது, வேறாகத் தாரத்தோடு தலை நிற்கும் தலங்களே எங்கும் உள்ளன.

‘சிவம்’

சிவம் என்றதன்பொருள்:- குறைவிலாத மங்கலக் குணத்தன்; அநாதியே மலம் இல்லாத தூயன்; அச்சிவனே வீடுநல்கும் உரிமையுடைய ஞானரூபன். “அவன் அவள் அது எனும் அவைதொறும் ஒன்றும் இச்சிவன் அல்லால் முத்தியிற் சேர்த்துவார் இல்லை,” இது வேத வாக்கியம். அந்நிய தேவதையை அகத்திலும் எண்ணாதே. சிவனையே சிந்தித்து வழிபட்டுவா. அதுவே வீடு பெறுவிக்கும். வேதக் கூற்றாவது:- மானிடன் விசும்பைத் தோல்போற் சுருட்ட வல்லன் ஆனால், சிவனை வழி படாமல் வீடு பெறவும் வல்லனாவன். இந்நூலில் உள்ள சிவ தோத்திரங்களை மாத்திரம் தொகுத்து மனனம் செய்து நாள்தொறும் பாடிப் பரவி வருதல் ஒன்றே பரகதி வழி காட்டும் பெருமையுடையதாகும். அவை இவை:-

152-45; 154-50, 51; 162-16,17,18; 163-19,20,21; 177-39,40,41; 178-42,43; 191-40,41; 192-42; 212-57; 233-11; 295-34; 362-16; 431-85; 556-8,9; 557-10; 579-67,68; 580-69;

காஞ்சியில் எத்திருக் கோயிலுள்ளும் அம்மையார்க்குத் தனித் திருக்கோயில் இல்லை. இங்குள்ள இலிங்கங்களுள் இலிங்கமூர்த்தி சிவம், சிவலிங்கவேதி சிவை (அம்மை) காமக்கோட்டம் தனிக் கோயில். திருக்கோயிலுக்குட்பட்டது அன்று. அதனால் ‘தாரத்தோடு ஒன்றாவர்’ என்பதற்கு இக் காஞ்சி நகர் அன்றிவேறு எடுத்துக்காட்டில்லை. ‘இகழறும் இலிங்கவேதி என்னுரு இலிங்கவேதி திகழ்மதிச் சடில மோலிச் சிவபிரான் வடிவுகண்டாய்’ என்று திருமாலுக்கு நம் பெருமாட்டி சாப விடைக்கு வழியுணர்த்தி யருளிய இடத்தில் (இப்புராணத்திற்) காண்க.