xi

பெறல் உறுதி, (648-215) வேதியர் உள்ளமும் வேதாகம நெறியொழுக்கம் ஓம்பி மிக்கு உயர்ந்தோர் உள்ளமும் சிவயோகியர் உள்ளமும் மெய்யடியவர் உள்ளமும் ஒன்றனில் ஒன்று உயர்ந்தவாகும். (இஃது புண்ணியஸ்தலங்களும், உத்தம ஸ்தலங்களும் , காசியும், காஞ்சியும் முறையே உயர்ந்தனவாகும் (இதுபுறம்) தென்னாடு , தமிழகம், தொண்டைநாடு, காஞ்சி என்னும் முறையில் (இக்காஞ்சிப்புராணத்தில்) வைத்து, அவை சிறந்துவிளங்க, ஐயன் திருக்கண்ணை அன்னை புதைத்தருளினாள் என்று ஆசிரியர் அருளியதால் விளங்கும் சிறப்பை அறிஞர் அறிவர்.

சிவ பரத்துவம்:-

193-48,49; 220-16; 221-17,19,21; 223-25,28; 307-15,16; 308-17; 350-14; 429-78,79; 430-80,81,82,83; 431-84,85; 463-44; 474-25,26;

சிவ பக்தி: 318-9; சிவபத்தி பேதம்: 389-7,8; 390-9,10 சிவ பூஜை: 213-60,61, 62; 214-63,64,65; 29-23,24,25,26,27,28,29,30; 362-15,16,17,18; 388-4; 498-21,22; 499-23; 548-26,27; 549-28,29; 598-24,25; (சைவத்திறம்:- 606-55,56; 607-57,58,59; 608-60,61,62,63; 609-64; சரியை கிரியை யோகம் ஞானம் முத்திமுடிபு).

தில்லையில் திருச்சிற்றம்பலம் மட்டும் பரவெளியாகும். காஞ்சியோ தன் எல்லை முழுவதும் பரவெளியாம் பரத்துவம் உள்ளது. (668-295)

“ஆதி அந்தமும் இல்லதோர் மெய்யறி வானந்த நிறைவாகுஞ் சோதி நந்தமைத் தம்மனக் குகையினுந் தொழுபவர் கருத்தீமை காது காஞ்சியாம் பரவெளித் தலத்தினுங் காண்டகப் பெறுவோரே ஓதி முற்றுணர் உறுவரும் பெறலரும் வீட்டினை உறுவாரால்” ( 668-296)

அக்காஞ்சித் தலத்தில் இறந்தவர்க்குத் தீக்கடன் கழிப்போரைச் சூதகம் தொடக்குறாது . இழிநரைத் தீண்டினும் தொடக்கில்லை. (669-297)

சிவபூஜையும், சிவத்யாநமும், சிவஸ்தோத்திரமும், சிவபக்த பூஜையும் ஆகிய நான்கும் கொடிய மாபெரும் பாவத்தையும் தீர்க்கவல்ல பிராயச் சித்தமாகும். (602-39)

அகத்தியர் ஸ்தோத்ரமாக இப்புராணத்தில் அமைந்தவற்றின் பொருளை எல்லாச் சைவரும் உணர்தல் வேண்டும். உணர்ந்து அவ்வாறே ஒழுகல் வேண்டும். அவையாவன:-

(1) எனக்கு இப்பிறவியும் யான் செய்த தவமும் என் அறிவும் பயன்விளைத்தன.

(2) அரியும் அயனும் அடிமுடியறியாத பெருமானே! அவ்விருவர்க்கும் காட்டாத திருவடிகளை அடியேன் காணக் காட்டியருளினை. அதனால் என் நினைவெல்லாம் நிறைவேறப் பெற்றேன்.