xiii
“வன்புலையுடம்பே ஆவி வருத்திடும் பிணி; வேறில்லை”
“பெரும்பிணியிதனைத் தீர்க்கும் மருத்துவன் பிறவியில்லாப்
பரம்பொரு ளான முக்கட் பரமனே என்று தேறி
முரண்பயில் விடையோன் தென்பால் முகத்தினைச் சரணம் எய்தி
விரும்பி வீடுறுதற்பாலார் பிறப்பினை வெருவப் பெற்றார்”
|
என்னும் (இப்புராணம்)
பாடலை முடிவாகக் கூறி இம் முகவுரையை முடித்துக்கொள்கிறேன்
முகவுரையில் வருவன பக்க எண்ணும் பாட்டெண்ணும்
உ
சிவமயம்
தமிழக முதலமைச்சர்
உயர்திரு . எம். பக்தவச்சலம் அவர்களுக்கு
வாழ்த்து
அவனியில்
தோன்றில் புகழொடு தோன்றல் அஃதிலார் நன்றுதோன்
றாமை
தவமுயர் திருவள் ளுவருரை தனக்குத் தகுபக்த வச்சலம் நீயே
உவரிசூ ழுலகம் புகழ்ந்திட என்றும் ஒன்பதோ டேழுபே றெய்தி
நவந்தரும் உமையே கம்பர்தம் அருளால் நானிலத் தூழிவா ழியவே. |
வெண்பா
சென்னைமுதன் மந்திரியாம் சீர்பக்த வச்சலநீ
பின்னை கலைமான் பிரிவின்றி-மன்னவனாய்
இந்திரசம் பத்தென்ன இப்புவியில் வாழியவே
தந்திமுகன் தண்ணருளாற் றான் |
இந்துசமய
அறநிலையத் தலைவர்
உயர்திரு . மா. செ. சாரங்கபாணி முதலியார், பி.ஏ.,பி.எல்.
அவர்கள்.
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 21வது பட்டம்
ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய ஞானதேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் அறிவித்து
3000 ரூபா நன்கொடையாகப் பெற்று முற்றுவித்த உதவியை என்றும் மறப்பதில்லை. அவர்கள் நலம்பலபெறப் பண்ணின்மென்மொழி பெண்ணொருபாகன்எங் கண்ணுதலருளால் எண்ணிய பெற ஆசீர்வதித்து
வாழ்த்துகின்றேன்.
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
உமைதிரு
முலைப்பால் உண்டவர் புகழ்மா
கறலுயர் பரம்பரைச் சைவ
தமிழுடன் பீஏ, பீஎல்தேர்ந் தரசர்
தஞ்சபை வழக்கறி புலவ
சமயதே வத்தா னத்தற நிலையத்
தலைவநீ சாரங்க பாணி
இமமகள் பாகத் தேகம்ப ரருளால்
என்றும்நீ டூழிவா ழியவே |
|