xiv

புவன நாயகியோ டடைக்கலங் காத்த புண்ணியன்
     நண்ணுமா கறல்வாழ்
தவநெறிச் சார்ங்க பாணிநற் பெயர்சார்
     சட்டநூற் புலமையிற் றழைத்துச்
சிவநெறிவளரச் செந்தமிழ் நாட்டுச்
     சிவாலய முதற்பிற அறங்கள்
நவமுறச் செழிக்க நடாத்தும் ஆணையினர்
     நலமொடும் வாழி வாழியவே

நன்கொடையாக 3000ம் ரூபா உதவிய மேற்படி திருக்கயிலாய பரம்பரை மகா சந்நிதானத்திற்குத் திக்குநோக்கிய வணக்கத்துடன் வாழ்த்து

எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

நந்தியெம் பெருமான் முதற்சன குமர
     ஞானசத் தியதரி சனியும்
அந்தமார் ஞானப் பரஞ்சோதி முனிகள்
     அகச்சந்தா னத்தினா ரியர்பின்
அந்திவண் ணத்தற் கன்பர்மெய் கண்டார்
     அருணந்தி மறைஞான முனிவர்
புந்தியின் ஞானம் உயருமா பதியும்
     புறச்சந்தா னத்தி னாரியரே.
இத்தகு திருக்கை லாய நன்மரபில்
     இருபத் தொன் றாவது பட்டம்
அத்தனே கம்பர் ஆவடு துறையுள்
     ஆரியனாய் வந்த தொக்கும்
உத்தம ஞான சுப்பிர மணிய
     உயர்மகா சந்நிதா னந்தான்
நத்தியிங் கிவரே ஞானச் செங்கோலை
     நடத்திநீ டுழிவா ழியவே.

சிறப்புப் பாயிரங் கொடுத்த ஸ்ரீலஸ்ரீ ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் திருவடிக்கு வணக்கம். மற்றும் அணிந்துரை முதலிய உதவிய அன்பரனைவர்க்கும், ஸ்ரீ காமாட்சியம்மையார் சமேத ஸ்ரீ: ஏகாம்பரநாதர் திருவருளால் அருமகப் பேறும் நிறை பெருந்திருவும் வளமுறப் பெற்று உளமிகமகிழ இறைவனை இறைஞ்சி வாழ்த்துகின்றேன் ஆசீர்வாதம்.

மற்றும் இந்நூல் முற்றுற உபாயங்களை அறிவித்த சைவப் பஞ்சாங்க ஆசிரியர் கணிதசோதிடப் புலவர் சங்கரங்கோயில் உயர்திரு இ. மு. சுப்பிரமணிய பிள்ளையவர்கட்கு அடியேன் நன்றிஉரித்தாக. தொண்டை