xv

மண்டல சைவ வேளாளர் சங்கத் தலைவர் உயர்திரு சடகோப முதலியார் அவர்கட்கும் என்றும் மறவா நன்றியுடன் அவர்கள் நலம்பல பெற ஆசீர்வதிக்கின்றேன் .

எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

இந்துலா மாடஞ் சென்னைமா நகரில்
     இனிதுறை கற்றவர்க் கன்ப
செந்தமிழ்க்கல்வி அறிவுடன் ஒழுக்கம்
     சிறந்தவ பரம்பரைச் சைவ
சிந்தையிற் றூய சேக்கிழார் மரப
     செல்வமும் கல்வியும் மிக்கு
நந்தலில் புகழே கொளுஞ்சட கோப
     நாமநீ நீடுவா ழியவே.

இந்நூல் முழுதிற்கும் அச்சாக வேண்டிய பேப்பர் பல இடங்களில் திரிந்தலைந்து வாங்கிக் கொடுத்தும், இதிற்கண்ட சித்திரக் கவிகளின் பிளாக்குகளையும் நமது உருவப் பிளாக்கையும் ஸ்ரீ காமாட்சியம்மையார் தழுவக்குழைந்த திருவுருவ மாவடி பிளாக்கு முதலியவைகளையும் செய்துகொடுத்துதவிய சைவப்பற்றும் தமிழ்ப்பற்றும் மிக்க சென்னை கவுணியன் அச்சக வுரிமையாளர் உயர்திரு கா. முருகேச செட்டியார், சமரபுரி செட்டியார் தவப்புதல்வர்கள் வேணு செட்டியார், சிவராம செட்டியார், குருநாத செட்டியார் இவர்கட்கு வாழ்த்து.

வெண்பா

முருகேசச் செம்மலுடன் மூதறிஞன் சமரபுரி
பெருநேசத் தாலிவர்கள் பெற்று-வருநேசர்
வேணுசிவ ராமனுடன் வேண்டுகுரு நாதனிவர்
தாணுவரு ளால்வாழ்க தாம்

இந்நூலைச் செம்மையாய் அச்சிட்டுப் பயிண்டு செய்து கொடுத்த காஞ்சிபுரம் முத்தமிழ் அச்சக உரிமையாளர் உயர்திரு S. காளப்ப முதலியார் அவர்கட்கு வாழ்த்து.

எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

பூமலர்ப் பொதும்பர் இஞ்சிசூழ் காஞ்சிப்
     புராணமாக் கவிபொழிப் புரையும்
தேமலர் மார்பன் காளப்பச் செம்மல்
     தெளிவுறப் பதித்தளித் தனனால்
வாமமேகலை காமாட்சியே கம்பர்
     வளர்திரு வருளினா லென்றும்
மாமலர்த் தருவிந்திரனென வவனும்
     மனைமக்கள் தாமும் வாழியவே.