xvi

வெண்பா

புலவர்புகழ் காஞ்சிப் புராணப் பொழிப்பைப்
புலவரமு தென்னப் புகன்றான்-புலமைமிகு
பொன்சண் முகக்குரிசில் போதமிக வாழியவே
நம்சண் முகனருளால் நன்கு.

கட்டளைக் கலித்துறை

உலகம் புகழ்ந்திடுங் காஞ்சிப் புராணம் உரையெழுதி
நிலவும்படி செய்தனன் புலவோருளம் நீங்ககிலான்
நலங்கொண்ட வள்ளுவர் கல்லூரி ஆரியன் நற்றமிழில்
வலங்கொண்ட பொன்சண்மு கன்கல்வி செல்வத்து வாழியவே

உரையாசிரியர் அவையடக்கம் எழுசீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்

வல்லினங் கசட தபறஆ றெழுத்தின்
     வருதல்முன் இலடற அவைபோல்
நல்லினந் தெய்வப் புலவர்பே ருரைமுன்
     நவிலுமென் உரையஃ தற்றே
செல்லினம் மாரி பொழிவபோற் கவியைச்
     செப்பிடு மப்பெரி யோர்கள்
மெல்லின அறிவின் என்னுரை யேற்று
     மேலுற ஆசிகூ றுவரே.
பதிபசு பாச முப்பொருள் விளக்கம்
     பகர்சிவ ஞானபா டியஞ் செய்
ததிர்கட லுலகும் ஆண்டளப் பானும்
     ஆதிசே டனும் புகழ்ந் தேத்தித்
துதிசெயும் உயர்மா தவச்சிவ ஞான
     முனிவர்சொல் கவிக்குரை செய்தேன்
கதிர்முனற் கத்தி யோதம்போன் றடியேன்
     கற்றவர் நன்மதிப் புறவே

கலிவிருத்தம்

வேதஆகம விதியுமை செயும்அருச் சனைபோல்
காதலா லெறிகல்லுமேற் றருளுமே கம்பர்
ஓதுபல்கலை வல்லுந ருரைக்கரு ளுவபோல்
போதமில் என துரைக்கருள் புரிவதும் வழக்கே.