xvii

சென்னை அறநிலையத் துணைத்தலைவர்
உயர்திரு . D. இராமலிங்க ரெட்டியார், M.A.B.L. அவர்களுக்கு
வாழ்த்து.

செல்லுறழ் சோலைச் சென்னைமா நகரில் தேவத்தா னங்கள்மேற்
                                                                       பார்வை
நல்லறத் துறையிற் றலைவருக் குற்ற நற்றுணை யாய்அமை தலைவ
இல்லற நெறியில் வருவிருந் தோம்பும் இரா மலிங் கச்செம்மால்
                                                                       என்றும்
அல்லறற் குழலி மனைவி நன்மக்கள் அவரொடும் வாழிநீ டூழி.

உயர்திரு. D. மாதவப் பிள்ளை B.A.B.L.,
அறநிலைய உதவி ஆணையர் (காஞ்சிபுரம்) அவர்களுக்கும்
எம் நன்றி கலந்த வணக்கம் உரியதாகுக.
                                      பொன் - சண்முகனார்.

இந்நூல் பொழிப்புரையுடன் அச்சிடப் பொருளுதவிய அன்பர்
சென்னை மங்களாகபே உரிமையாளர்
உயர்திரு .  T. சம்பந்த முதலியாரவர்கட்கு

வாழ்த்துக் கலி விருத்தம்

கச்சியே கம்பர் காதையை அச்சிட
இச்சை யாப் பொரு ளீந்த சம்பந்தனுங்
கச்சினா ளவன் காதலி சுற்றமும்
பொச்ச மில்சிவ போகமுந் துய்ப்பரே
- பொன். குமாரசுவாமி அடிகள்

அருட்டிரு.
திரு முருக, கிருபானந்தவாரியார் சுவாமிகள்
அணிந்துரை

சண்முகனார் செய்த தகவார் பொழிப்புரையும்
தண்முகமார் காஞ்சித் தலநூலும்-விண்முகமும்
கொண்டு மகிழக் குமாரசாமித் தவனார்
கண்டுவெளி யிட்டார் களித்து.