xxvi
|
இரண்டு வினையால் விளைந்த - வகை இரண்டையுங் காட்டிஎன் சென்னியின் மீதே இரண்டு சரணமும் சூட்டி - அஞ்சில்
இரண்டை இரண்டில் அடக்கவல் லாராம் |
|
ஆனந்தம் ஆனந்தம் தோழி. 2 |
2. இரண்டுவினை -- நல்வினை தீவினை. வகை இரண்டு -- இன்பத் துன்பங்கள். அஞ்சில் இரண்டை இரண்டில் அடக்கல் -- சிவாய நம என்னும் திருவைந் தெழுத்தில் மகரத்தைச் சிகரத்திலும் நகரத்தை வகரத்திலும் அடக்கல்.
|
மூன்றுல கும்படைப் பாராம் -- அந்த மூன்றுல கும்முட னேதுடைப் பாராம் மூன்று கடவுளா வாராம் -- அந்த மூன்று கடவுளர் காணவொண் ணாராம் |
|
ஆனந்தம் ஆனந்தம் தோழி. 3 |
|
நாலு வருணம்வைப் பாராம் -- பின்னும் நால்வகை ஆச்சிர மங்கள்வைப் பாராம் நாலுபா தங்கள்வைப் பாராம் -- அந்த நாலுக்கு நாலு பதமும்வைப் பாராம் |
|
ஆனந்தம் ஆனந்தம் தோழி. 4 |
4. நாலுபாதம் -- சைவாகமங்களின் உளவாகிய சரியை கிரியா யோக ஞானபாதங்கள். நாலுபதம் -- சாலோக சாமீப்பிய சாரூப்பிய சாயுச்சியங்கள்.
|
அஞ்சு மலமஞ் சவத்தை -- பூதம் அஞ்சுதன் மாத்திரை அஞ்சிந் திரியம் அஞ்சு தொழிலஞ்சு மாற்றி -- எழுத்(து) அஞ்சும் அஞ்சாக அமைக்கவல் லாராம் |
|
ஆனந்தம் ஆனந்தம் தோழி. 5 |
5. மலம், அவத்தை, தூலபூதம், சூக்குமபூதம், பொறி, ஆற்றுந் தொழில், திருநாம எழுத்து என்பவற்றை ஐந்தைந்தாக அமைத்துள்ளமையை எடுத்தோதியபடி.
|
ஆறாறு தத்துவக் கூட்டம் -- உடன் ஆறத்து வாக்களும் ஆதார மாறும் ஆறுகுற் றங்களும் நீங்க -- இரண்(டு) ஆறின் முடிவில் நடனஞ்செய் வாராம் |
|
ஆனந்தம் ஆனந்தம் தோழி. 6 |
6. இரண்டாறின் முடிவு -- முடியின்மேல் பன்னிரண்டங்குலம் அருவமாயுள்ள சுழுமுனையின் முடிவெனப்படும் துவாதசாந்தம்: இது மீதானம் எனவும்படும்.
|