xxvii
|
ஏழு புவனப் பரப்பும் -- கடல் ஏழுஞ்
சிகரிகள் ஏழும் பெருந்தீ(வு) ஏழுப் பிறவிகள் ஏழும் -- இசை ஏழும்
படைத்த இறைவ ரிவராம் |
|
ஆனந்தம் ஆனந்தம் தோழி. 7 |
7. பெருந்தீவு ஏழு:- நாவலந்தீவு, சாகத் தீவு, குசத்தீவு,
கிரௌஞ்சத்தீவு, சான்மலித் தீவு, கோமேதகத்தீவு, புட்கரத்தீவு என்பன.
உலகம் ஏழு:- பூலோகம், புவலோகம், சுவலோகம், மகலோகம், சனலோகம்,
தவலோகம் , சத்தியலோகம் என்பன.
|
எட்டு வடிவமா வாராம் -- அந்த எட்டு
வடிவுக்கும் எட்டரி யாராம் எட்டுக் குணமுடையாராம் -- பத்தி
எட்டும்உடையோரிதயத்துளாராம் |
|
ஆனந்தம் ஆனந்தம் தோழி. 8 |
8. எட்டுவடிவம் :- மண், புனல், தீ, காற்று, வெளி, ஞாயிறு,
நிலவு, உயிர் என்பன . இவை இறைவனுக்கு வடிவங்களாம். எட்டுக்குணம்:- முற்றுணர்வு,
வரம்பிலின்பமுடைமை , இயற்கையுணர்வுடைமை, இயல்பாகவே பாசங்களினீங்குதல்,
தன்வயமுடைமை , பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, தூயவுடம்பினனாதல் என்பன .
எண்வகைப்பத்தி:- அடியார் பத்தி, சிவபூசை கண்டு மகிழ்தல்,
சிவார்ச்சனை, சிவார்ப்பணம் செய்தல், சிவபுராணம் கேட்டல், பரவசமாதல்,
சிவனடிமறவாமை, பொய்வேடமின்மை .
|
ஒன்பதும் ஒன்பதும் ஒன்றும் -- மற்றை ஒன்பதும் முப்பதும்
ஒன்பதும் ஒன்றும் ஒன்பதும் ஒன்பதும் ஒன்றும் -- பின்னும் ஒன்பதும்
ஆனவைக் கப்புறத் தாராம்
|
|
ஆனந்தம் ஆனந்தம் தோழி. 9 |
9.தத்துவங்கள் முப்பத்தாறும் தத்துவிகங்கள் அறுபதுமாகிய
தொண்ணூற்றாறனையும் கடந்த நிலையினன் முதல்வன் என்றபடி. 19+49+19+9=96 எனக்
கணக்கிட்டுக் கண்டுகொள்க.
|
பத்துத் திசையுடை யாராம் -- பத்துப் பத்துப்பத்
தாந்திருப் பேருடை யாராம் பத்துக் கரமுடை யாராம் -- தவம் பத்தினில்
ஒன்றுபத் தாகச்செய் வாராம் |
|
ஆனந்தம் ஆனந்தம் தோழி. 10 |
|