Lxvi
தமிழ் பயின்றவர். நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். பழைய புதிய இலக்கண
நூல்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் ஆழ்ந்தாய்ந்துணர்ந்த
பேரறிவினார். நினைவாற்றல் சான்றவர். தந்தையார்க் குகந்த மைந்தனார்
எனச் சைவத் தொண்டு புரியும் சிவ புண்ணிய சீலர். பரிமேலழகரைப்
போலுரைப்பவர். நச்சினார்க்கினியரைப் போலப் புதுப்பொருள் காண்பவர்.
கச்சியப்ப முனிவரர்போல் வுறுதியுடையவர். பண்புகளின் முதன்மையதான
கற்றுணர்ந்தடங்கலுக்கு நிலைக்களமானவர். அவர்க்குள்ள ஆற்றலைக்
காட்டும் இடங்கள் பல உள. அவற்றை எல்லாம் கற்போர் காண்பர்.
இப்புலவர் திலகரைத் தமிழ் நாட்டிற்கு வழங்கியருளிய அடிகளார்
அவர்களையும் நிறைநாட்செல்வர் பொன். சண்முகனார் அவர்களையும்
திருவருள் நீடினிது வாழ்வித்தாள்க. அவ்விருவரும் வாழ்க, வாழ்க, வாழ்க.
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குரு மகா
சந்நிதானம் அவர்கள் நன்கொடை வழங்கி அருளினர். அவர் தம் திருவடி
மலர்களைச் சிந்தை செய்வாம்.
இதைப் பதிப்பித்த ‘முத்தமிழ் அச்சகம்’ முதல்வர் சைவத் திரு. எஸ்.
காளப்ப முதலியார்க்கும் கச்சித் திருவேகம்பன் திருவருள் எல்லா
நலங்களையும் நல்குக. ஏகம்பத்துறை யெந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு வானாய் போற்றி.
|