தருமை ஆதீனம் இயற்றிவரும் பணிகள் |
1. தேவாரப்
பாடசாலை நிறுவித் தெய்வத் தமிழ் வளர்ப்பது. |
2. வேத சிவாகம
பாடசாலை வைத்துத் திருக்கோயில் பூசை முறைகளைப் பயிற்றுவிப்பது. |
3. திருமுறைகள்,
சித்தாந்த சாத்திரங்கள், சைவ சமய நூல்கள் பலவற்றைத் தெளிவுற அச்சிட்டு வழங்குவது. |
4. தேவாரத்
தலங்கள் தோறும் வழிபாடுகள் நிகழ்த்தி அவ்வத்தலத் தேவாரத்தைப் புராண வரலாறுகளுடன்
அச்சிட்டு வழங்குவது. |
5. ஆலயங்கள்
பலவற்றிலும் நிகழும் பெருவிழாக்களில் சமய விரிவுரைகள், மாநாடுகள் நிகழ்த்திச்
சமய தத்துவங்களை மக்கட்கு உணர்த்துவது. |
6. தொடக்கப்பள்ளி,
உயர்நிலைப் பள்ளி, கலைக்கல்லூரி அமைத்து மாணவர்களுக்குக் கல்வி நலம் தருவது. |
7. அனைத்துலக
சைவசித்தாந்த ஆராய்ச்சி மையம் நிறுவி அதன் வாயிலாகக் கடல் கடந்த நாடுகளிலும்
நம் நாட்டிலும் வாழும் சமயம் சார்ந்த மக்கட்குச் சைவசமயப் பெருமைகளை அறிவுறுத்துவதோடு
சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் மாலை நேரக் கல்லூரி நடத்தி
வருவது. |
8. உயர்நிலைப்
பள்ளிகள் கலைக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ் மொழியை ஊக்கத்தோடு
பயிலப் பரிசுகள் வழங்குவது. |
9. ஞானசம்பந்தம்
என்னும் மாத இதழ் நடத்தி அதன் வாயிலாக மக்கட்குச் சமய உண்மைகளை உணர்த்தி
வருவது. |
10. ஆதீனத்தின்
அருளாட்சியிலுள்ள 27 திருக்கோயில்களையும் தூய்மையாகப் பரிபாலித்து நாள்வழிபாடு
சிறப்புவழிபாடுகள் நிகழ்த்திவருவது. |