4. | பதிகமே ழெழுநூறு பகருமா கவியோகி, பரசுநா வரசான பரமகா ரணவீசன், அதிகைமா நகர்மேவி யருளினா லமண்மூட ரவர்செய் வாதைக டீருமனகன், வார்கழல்குடி நிதியாகுவர்; சீர்மையுடைய ராகுவர்; வாய்மை நெறியாகுவர்; பாவம் வெறியாகுவர்; சால மதியராகுவ; ரீசனடியராகுவர்; வானமுடையராகுவர்; பாரின் மனித ரானவர் தாமே. - மேற்படி திருநாவுக்கரசுதேவர் திருவேகாதசமாலை - 7 |
திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்) திருநாவுக் கரசுவளர் திருத்தொண்டி னெறிவாழ வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் பெருநாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக் குரைசெய்ய வொண்ணாமை யுணராதேன். 1 தூயவெண் ணீறு துதைந்தபொன் மேனியுந் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையு நைந்துருகிப் பாய்வது போலன்பு நீர்பொழி கண்ணும் பதிகச்செஞ்சொன் மேயசெவ் வாயு முடையார் புகுந்தனர் வீதியுள்ளே. 140 மார்பாரப் பொழிகண்ணீர் மழைவாருந் திருவடிவு மதுர வாக்கிற் சேர்வாகுந் திருவாயிற் றீந்தமிழின் மாலைகளுஞ் செம்பொற் றாளே சார்வான திருமனமு முழவாரத் தனிப்படையுந் தாமு மாகிப் பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச் செல்வார். 395 வந்தொருவ ரறியாமே மறைந்தவடி வொடும்புகலி யந்தணனா ரேறியெழுந் தருளிவரு மணிமுத்தின் சந்தமணிச் சிவிகையினைத் தாங்குவா ருடன்றாங்கிச் சிந்தைகளிப் புறவருவார் தமையாருந் தெளிந்திலரால். 395 தொழுதுபல வகையாலுஞ் சொற்றொடைவண் டமிழ்பாடி வழுவிறிருப் பணிசெய்து மனங்கசிவுற் றெப்பொழுதும் ஒழுகியகண் பொழிபுனலு மோவாது சிவன்றாள்கள் தழுவியசிந் தையிலுணர்வுந் தங்கியநீர் மையிற்சரித்தார். 411 மண்முதலா முலகேத்த மன்னுதிருத் தாண்டகத்தைப் "புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றே" னெனப்புகன்று நண்ணரிய சிவானந்த ஞானவடி வேயாகி யண்ணலார் சேவடிக்கீ ழாண்டவர செய்தினார். 427 - திருநாவுக்கரசுநாயனார் புராணம் |