'பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும்
தீர்க்க தரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின
தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்
பற்றினார்.' எபி. 1 : 1.
இயேசு கிறிஸ்துவின் மூலமாய்க் கடவுள் வெளிப்பாட்டைப்
பெற்ற அவரது அடியார் பல்வேறு வகைகளில் அதனை வெளிப்படுத்தி
வருகின்றனர். கனம் M. ஆசீர்வாதம் ஐயரவர்கள் தாம் கிறிஸ்துவில்
பெற்ற ஆழ்ந்த அனுபவத்தைக் கொண்டு 'திரு அவதாரம்' என்ற கவிதை
நூலை இயற்றியுள்ளார்கள். அவர்கள் காலத்திலேயே நற்போதகத்தில்
அதன் ஒரு பகுதி வெளியிடப்பட்டு வந்தது,
பல ஆண்டுகளாக மறைந்துகிடந்த இக்கவிதைப் புதையலை
அவர்களது மகன் திரு. J. ஆசீர்வாதம் அவர்கள் நூல் வடிவாக அச்சிட்டு
வெளியிட முன் வந்தது அன்னார் கிறிஸ்துவுக்கும் அவரது சரீரமாகிய
திருச்சபைக்கு செய்துள்ள ஒரு பெரிய சேவையாகும். அவர்களை மனமாரப்
பாராட்டுகிறேன்,
இந்நூல் மிகவும் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.
வாசிக்கக் கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாத அளவு கருத்துச்
செறிவுடையது. இயேசு கிறிஸ்துவின் திரு அவதார வரலாற்றையும்
போதனையையும் மக்கட்கு எடுத்தியம்பும் ஒரு சிறந்த நூல், யாவரும்
விரும்பிப் படித்துப் பயனடைவார்கள் என நம்புகிறேன்,
|