நற்பயன்கள் மக்களுக்குக்கிட்டும் படி செய்யுங்கள்," என்று கேட்டோம். அப்பெருமகனும் அவ்வாறே செய்ய ஒப்புக்கொண்டு, அப்பெருமுயற்சியிலீடுபட்டு, அதை வெற்றியுடன் முடித்துள்ளார் என்றறிந்து எம்பெருமானுக்கு உளங்கனிந்து நன்றி கூறுகிறோம். கிறிஸ்தவக் குரு மேதையாம் ஐயரவர்களின் எழுத்துக்கள் என்னும் 'மாணிக்கக் குவியலை'த் தமிழ்க் கிறிஸ்தவ உலக மக்களுக்கு அள்ளி அள்ளித் தந்துதவும் திரு ஆர்தர் ஆசீர்வாதம் அவர்களுக்கு எம் இதய பூர்வமான பாராட்டுக்கள். அன்னார்க்கு மற்றுமொரு வேண்டுகோளும் விடுக்கின்றோம். "ஐயா, தங்கள் தந்தையார் ஒரு தமிழ்ப் புலவர் மட்டுமல்லர்; அவர்கள் ஒரு சிறந்த இறையியல் வல்லுனருமாவார்கள் (Theologian). 'திருச்சபை ஐக்கியம்' என்னும் பொருள் பற்றி ஓர் ஆங்கிலேயத் திருச்சபைக் குரு என்ற முறையில் (as a priest of the church of England), அவர்கள் தங்கள் ஆழ்ந்த கருத்துக்களை வெகு தெளிவாக எழுதிவந்தார்கள். அக்காலத் தீபிகை, நற் பாதகம் முதலிய மாதப் பத்திரிகைகளில் அவற்றைக்காணலாம். அவற்றையும் சேகரித்து வெளியிடுவீர்களேல், தமிழ்க்கிறிஸ்தவ இறையியல் மாணவர்க்கும் (Tamil Christian Thelological Students) மாண்புமிக்க சேவை செய்தவர்களாவீர்கள். கர்த்தர் உதவி செய்வார்". |