முகப்பு தொடக்கம்
viii பாசவதைப் பரணி

அமைப்பால், முன்னர் நடைபெற்ற வரலாற்றைப் பின்பு பாட அழைப்பதே மரபு என்று தெரியவருகிறது ; அன்றியும்,

“தெரிக்குஞ் சீர்த்திச் சிவஞான
       தேசி கன்றாள் சிரத்தணிந்து
பரிக்கும் பாச வதைப்பரணி
       பாடக் கபாடந் திறமினோ”

என்ற தாழிசையில் ‘பாசவதைப்பரணி பாடக்’ கடைதிறக்க வேண்டுமென்றிருப்பதை நோக்குகையில் கடைதிறப்பு, கடவுள்வாழ்த்தைப்போலப் புற உறுப்பென்பது பெறப்படுகிறது. கடைதிறப்பிற்குப் பின்வரும் காடுபாடியது என்னும் உறுப்பில், தேவியின் திருக்கோயிலமைந்துள்ளதும் பேய்களுக்கு வாழ்க்கை இடமும் ஆகிய புறங்காட்டைப் பற்றியவருணனை காணப்படும். 1 காடுவாழ்த்தென்னும் புறத்துறையின் வகையாக இதனைச் சொல்லலாம். பின், பேய்களைப் பாடியது என்னும் உறுப்புக் காணப்படும் ; இது கூளிநிலை எனவும் வழங்கும் ; இதன்கண் பேய்களின் இயல்பு கூறப்படும். பின்னர் வருவதாகிய கோயிலைப்பாடியது என்பதில் காளியின் திருக்கோயில் வருணனையும், தேவியைப்பாடியது என்னும் உறுப்பில் காளியின் திருமேனி, திருவருட்பெருமை முதலியனவும் சொல்லப்படும் ; பின்னது காளிநிலை எனவும் வழங்கும். பேய்முறைப்பாடு என்னும் உறுப்புப் பின் அமைக்கப்படும் ; இதன்கண் பசியால் வருந்தியபேய்கள் தங்கள் பசிக்கொடுமை முதலியவற்றைக் காளியின்பால் முறையிடுதல் கூறப்படும். 2போர்க்களத்தே யன்றிப் பிறவிடங்களில் உணவு முதலியன பெறுதல் கூடாதென்று வைரவக்கடவுளால் ஆணை இடப்பட்டிருத்தலின் பேய்கள் போரில்லாத காலத்திற் பசியால் வாடுமென்பர். அப்பசித்துன்பத்தையும் பிறவற்றையும் காளிக்குக் கூறும் வழக்கு,


1. தொல். புறத். சூ. 24.

2, “தற்பர வடுக னாணைத் தன்மையா லலகை யீட்டம், நற்புன னீழல் பெற்றும் நணுகருந் தன்மை யேபோல்” (கந்த. மேருப். 21) ; “தெருள்சேர் முனிவ புனன்முதல தீண்டிப் பேயி னுடனடுங்க, ஒருவா துடற்றும் வயிர வன்ற னாணை யெனத்தாழ்ந் துரைத்ததுவே” (காசிகாண்டம், அலகைதேவனாகிய. 10); “குருதி யீர்ம்புனல் கணங்களுக் களித்தனன் குடிப்புழிச் சிலவேனும், பருகு தற்குப்போ தாமைகண் டவனிமேற் பறந்தலைப் பெருவேந்தர், செருவி லேற்றுயிர் மடிந்தவர் விண்மிசைத் திகழவங் கவர்செந்நீர், இரண மண்டல வயிரவன் கணங்களுக் கினிதமைத் தருள்செய்தான்.” காஞ்சிப். வயிரவீசப். 37.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்