மூத்தவள் வயிற்றெரிச்சல்

மூத்தவள் வாழ்ந்திருக்கும்போது அவள் கணவன் இளைய தாரத்தை மணந்தான். பல நாட்களுக்குப்பின் மூத்த மனைவியைச் சந்திக்கிறான். அவர்களிடையே நடக்கும் உரையாடல் வருமாறு:

கணவன்: செம்புச் சிலை எழுதி
செவத்தப் புள்ள பேரெழுதி
வம்புக்கு தாலி கட்டி
வாழுறது எந்த விதம்?
மனைவி: மாமன் மகளிணுல்ல
மறிச்சு வச்சுத் தாலிக் கட்டி
மந்தை யோரம் வீட்டைக் கட்டி
மாடடையப் போட்டாரில்ல
கணவன்: கல்லு அடுப்புக் கூட்டி
செடிய மறவு வச்சு
பொங்கலிட்டுப் பார்த்தாலும்
பொருந்தலையே உன்னழகு
மனைவி: கூடுணமே ரெண்டு பேரும்
குமர கோயில் அன்னம் போல
இன்னிப் பிரிந்தாயனா
இறப்பதும் நிச்சயம் தான்
என்னைய விட்டுட்டு நீ
இளையதாரம் கட்டினியே
போற வழியிலியே-உன்ன
பூ நாகம் தீண்டிராதோ?

 

சேகரித்தவர்:
S.M. கார்க்கி

இடம்:
சிவகிரி.
நெல்லை மாவட்டம்