|
கண்டீர்களா
?
காதலனைச் சில நாட்கள் காணாவிட்டால் காதலி தேடுவாள். காதலியைக்
காணாவிட்டால், காதலன் தேடுவான். இவர்கள் மறுபடி சந்திக்கும்போது காணாமல் போனவன்
அல்லது போனவளைத் தேடி அலைந்தது போல கற்பனைப் பாடல்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்
கொள்ளுவார்கள். எல்லோரும் அறிய ஒருவரையொருவர் தேடி அலைய முடியுமா?
ஆயினும் கற்பனையில் எங்கெல்லாமோ தேடி அலுத்ததாக மறு சந்திப்பின்போது ஒருவருக்கொருவர்
கூறிக் கொள்ளுவார்கள். இவ்வகைப் பாடல்கள் ஆண்கள் பாடும் பாடல், பெண்கள் பாடும் பாடல்
என இருவகையுண்டு. அவற்றுள் சில கீழே காண்க.
(ஆண்கள்பாடுவது)
வட்டம் போடும் வடக்குத்தெரு
வந்து நிற்கும் தெற்குத்தெரு
கூட்டம் போடும் கல்லுரலு
குயிலும் வரக் காணலியே!
எண்ணைக் கருப்பே
என்னிலும் ஏ கருப்பே
தண்ணிக் கருப்பை
தனியே வரக்காணலியே!
கண்டாங்கிச் வளையல்காரி
கைநிறைஞ்ச வளைல்காரி
கண்டா வரச் சொல்லுங்க
ரெண்டாம் நம்பர் தோட்டத்துக்கு
மாரளவு கருதுப் புஞ்சை
மதிகிளி காக்கும் புஞ்சை
கூட்டக் கருதுக்குள்ளே
குயிலும் வரக் கண்டியளா?
சாலை இருபுறமும்
சந்தனவாழ்மரமே
கொழ்ந்து மாமரத்தை
கூடுவதற்குத் விளாத்திகுளம்
கிளிக்குஞ்சு போயிருக்கு
கண்டா வரச் சொல்லுங்க
கல்யாண வாசலுக்கு
|