|
(பெண்கள்
பாடுவது
)
ஆளுலேயும் குட்டை
அழகுலயும் பூஞ்சிவப்பை
நடையிலயும் நைச்சிவப்பை
நடுச் தெருவில் காணலியே!
புதுப்பானைக் கருப்பழகை.
புத்திரன் போல் நடையழகை
சிரிப்பாணி மன்னரையும்
தெருவில் வரச் கண்டியளா?
தோப்பிலயோ சேவல் கட்டு
தோகைமயில் போயிருக்கு
கண்டா வரச் சொல்லுங்க
கானமயில் வாடுரண்ணு
ஊருசுத்திக் காளை எங்கே
உள்ளுரு மட்டத் தெங்கே
நாடு சுத்திக் காளைஎங்கே
நடக்க விட்டு நான் பார்க்க
பெருநாழிப் பாதைக்கு
பேசுங்கிளி போயிருக்கு
கண்டா வரச் சொல்லுங்க
கம்மந் தட்டை குச்சிலுக்கு
காலு வளர்ந்த கிளி
கல்லுரலுகாத்தகிளி
தோகை வளர்ந்த கிளி
தோப்பிலயும் காணியளோ?
வட்டார
வழக்கு:
சிரிப்பாணி-சிரிப்பு
(நெல்லை
பேச்சு வழக்கு);
பெருநாழி-முதுகுளத்தூர் தாலுகாவில் ஒரு ஊர்;
காணியளோ-கண்டீர்களோ?
(பேச்சு
வழக்கு);
ஊரு சுத்திக் காளை, உள்ளுருமட்டம்-இவை காதலனைக் குறிக்கும் குறியீட்டுச் சொற்கள்.
|
சேகரித்தவர்
:
S.S. போத்தையா |
இடம்
:
விளாத்திகுளம்,
நெல்லை மாவட்டம். |
|