|
ஊடல் வேம்பாச்சே
!
குடும்பப் பகையால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். காதலன்
பகையைப் பொருட்படுத்தாமல் அவள் காட்டுக்கு வரும்பொழுது அவளிடம் பேச்சுக்
கொடுக்கிறான்.
“சிறிது காலம் நமது உறவை முறித்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் விபரீதம் விளையும்
”
என்று எச்சரிக்கிறான்.
|
ஆண்: |
சின்னச் செருப்பு
மாட்டி
சிறு
கலயம் கஞ்சி கொண்டு
வருண முழி முழிச்சு
வாராளையா
வடகாடு
|
|
பெண்:
|
பாதை பிரிவாச்சே
!
பக்கப் புளி
ஒண்டாச்சே
ஊடாலே வேம்பாச்சே
உனக்கும்
எனக்கும் பகையாச்சே |
வட்டார வழக்கு:
ஊடாலே-நடுவில்;
புளி-புளிய மரம்;
ஒண்டு-ஒன்று.
|
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
|
இடம்
:
தூத்துக்குடி வட்டாரம். |
|