|
பயல்களைப்
பார்ப்பாளாம்
!
சிற்றூர்களில் கூட உழைத்துப் பிழைக்காமல் வேசித் தொழில் செய்து இழிவான வாழ்க்கை
வாழும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து வள்ளுவர் முதல் பல நீதி நூலாசிரியர்கள்
போதனை செய்து வந்திருக்கிறார்கள். ஆயினும் சமூக நிலைமைகள் காரணமாக, அவர்கள் இன்னும்
இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய வேசி ஒருத்தியின் வலையில் அகப்பட்டு அவள்
மீது மோகங்கொண்டு திரிகிறான் ஒரு வாலிபன். அவனைத் திருத்துவதற்காக உழைத்து நல்வாழ்க்கை
வாழ ஆசைப்படும் பெண்கள் அவளது வாழ்க்கையின் இழிவைப் புலப்படுத்திப் பாடுகிறார்கள்.
ஆசை விசுவாசம்
அந்தப் புள்ளே பூவாசம்
என்ன விசுவாசமோ
இனி மறக்கக் கூடுதில்லை
குறு குறு வென்று பாராதடி
குறுஞ்சிரிப்பு சிரியாதடி
உன் குறு குறுப்பும் குறுஞ்சிரிப்பும்
ன் குடியைக் கெடுக்குதடி
கருத்த கருத்தப் புள்ளா
கண்ணுக்குள்ளே சுழட்ட
மாறிச் சுழட்டாதடி
மாயப்பொடி போடாதடி
காத்தடிச்சு தாழை பூத்து
காத வழி பூ மணக்க
எருக்கலம்பு வாடை தட்டி-நீ
தெருக்கடந்து போகலாமோ?
தட்டக்காட்டு விட்டிப் போல
சாலைக்காட்டு மந்தி போல
வேலைக்காட்டு குன்னாய் போல
விலகி நல்லாப் போறாளடி
எல்லோரும் கொண்டையிலே
ரிருக்கும் பேனிருக்கும்
தட்டுவாணி கொண்டையிலே
தப்பாமல் பூவிருக்கும்
அஞ்சாறு வீட்டுக்காரி
அதிலே ஒரு பாட்டுக்காரி
பாட்டுப் படிப்பாளாம்
பயல்களைப் பார்ப்பாளாம்
கண்டியிலே பெண்டாட்டி
கடலோரம் வைப்பாட்டி
தூத்துக்குடி மந்தையிலே
துட்டுக்கொரு பெண்டாட்டி
வட்டார
வழக்கு:
வேலைக்காட்டு-வேலிக்காடு;
குன்னாய்-குறுநாய் (அது
மறைந்து மறைந்து செல்லும்);
துட்டு-பழைய நான்கு
காசுகள்.
குறிப்பு:
மனமொத்த மனைவி கிடைப்பது கடினம். வைப்பாட்டி மலிவாகக் கிடைப்பாள்
என்று குலப்பெண்கள் இழிவாகப் பேசுகின்றனர்.
|
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
|
இடம்
:
தூத்துக்குடி வட்டாரம்,
நெல்லை மாவட்டம். |
|