|
கிடைக்குமுண்ணு எண்ணாதீங்க
காதலன் ஆடம்பரக்காரன்.அவனை மணந்து அவள் சுகம் பெறப் போவதில்லையென்று
வேண்டியவர்கள் சொல்லுகிறார்களாம். காதலி அவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.
|
அவள் : |
அரைக்கீரை சீறு
பாத்தி
காலரையும்
தூக்கிவிட்டு
நிக்காங்க
எங்க மச்சான்
இன்பமாய்
தலைப்பாக்கட்டி
பொட்டிடுமோ
உங்க நேர்த்தி
பொருந்திடுமோ
என் சதுரம்
விட்டுவிடு
என்று சொல்லி
வேணவர்கள் சொல்லுதாங்க
|
|
அவன் : |
வெட்டுறாங்க குத்துறாங்க
வேணவர்கள் சொன்னால்
என்ன
கம்படி
விழுந்தாலும்
கனியை
விடப் போறதில்லை
|
|
அவள் : |
கொண்டையிலே பூவிருக்க
குளத்துத்
தண்ணீ்ர் நிலம்பாய
கங்கையிலே
விழுந்த பூவை
கிடைக்குமின்னு
எண்ணாதீங்க
|
வட்டார வழக்கு:
வேணவர்கள்-வேண்டியவர்கள்.
குறிப்பு:
'கங்கையில் விழுந்த பூ'- 'எனக்கு மணம் பேசி முடிக்கு முன் என்னை
மணம் செய்து கொள்' என்ற பொருள் தோன்றப் பேசுகிறாள்.
|
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
|
இடம்
:
தூத்துக்குடி வட்டாரம். |
|