|
சாக்குப் போக்கு
!
ஒருவரையொருவர் சந்திக்க வீட்டில் பெற்றோர்களிடம் பல
சாக்குப் போக்குகள் சொல்லிவிட்டு வரவேண்டுமெனக் காதலி அவனுக்கு பாடம்
சொல்லுகிறாள். அவன் அவளுக்கு இளைத்தவனல்ல
என்று அவன் பேச்சால் தெரிகிறது.
| காதலி: |
சலுப்பச்சட்டி ஊசி கொண்டு
சாக்குத்தைக்கப்
போறவரே
சாக்குத்தைக்க
நீங்க வாங்க
சாலைப்
பாதை நான் வாரேன்
|
| காதலன்: |
தூக்குச்சட்டி
சோறு கொண்டு
சூச்சியமா வார புள்ளா
தூக்குச்சட்டி
சோறு கொண்டு
சூட்சியமா நான் வருவேன்
|
| காதலி: |
மண்வெட்டி
தோளில் போட்டு
மடை திறக்கப்
போறவரே
மடையைத்
திறந்திடுங்க
மயில்
வந்து நீராட |
|
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
|
இடம்
:
தூத்துக்குடி மாவட்டம். |
|