|
செல்வக் குணம்
சில நாட்கள் தன்னைப்
பார்க்க வராமல் இருந்தமைக்காகக் காதலி, தன் காதலன் மீது கோபங் கொள்ளுகிறாள். அவன்
அவளைச் சமாதானப்படுத்துகிறான். அவளும் கோபம் மாறி அவனைச் “செல்வக்
குணம் எங்க மச்சான்”
என்று அழைத்துக் கொஞ்சுகிறாள்.
|
காதலி
: |
ஊதாக் கலர் சட்டை
உன்னிதமா நடை
நடந்து
எந்தச்
சட்டை போட்டாலும்
ஏறிட்டுப்
பார்ப்பதில்லை
ஆக்கை
அடியும் பட்டேன்
அவராலே சொல்லும்
கேட்டேன்
மூங்கில் தட்டை பூசை
பட்டேன்
மூதேவி
மகனாலே
சின்னப்பல்லுக்
காரரோடு
சிநேகிதம்
வைக்கப் போனேன்
கொஞ்சப்
புத்திக் காரரோடு
கூடினது
மோசம் தானே
|
|
காதலன்
:
|
ஓநாய் முகத்தழகி
ஒட்ட வச்ச
காதழகி
ஒட்ட வச்ச காதுக்குள்ளே
விட்டனடி தங்க நகை
|
|
காதலி
: |
ஆரம்
பண்ணிப் போட்ட மச்சான்
கழுத்தழகு
பார்த்த மச்சான்
சீலை
வாங்கித் தந்த மச்சான்
செல்ல
மச்சான் நீங்க தானே
மலையேறி
மூங்கில் வெட்டி
மலைக்கும் கீழே
ரோட்டுப்போட்டு
தெரு மறிச்சு சிலம்பம்
செய்யும்
செல்வக்குணம்
எங்க மச்சான் |
|
சேகரித்தவர்
:
M.P.M.
ராஜவேலு
|
இடம்
:
தூத்துக்குடி வட்டாரம். |
|