|
புகைபோகச் சன்னலுண்டு
வீட்டில் புகைபோகச் சன்னலுண்டு. ஆனால் அவள் உள்ளக்
கிளர்ச்சிகளுக்கு வெளியீடு காணச் சன்னல்கள் இல்லை. எத்தகைய இன்ப அனுபவங்களும் அவளுக்கு
விலக்கப்பட்டவை. வெளியே தலை நீட்டினால் ‘பாவி’
என்று உலகம் சொல்லுகிறது. உணவு உண்பது தவிர
வேறு அனுபவம் அவளுக்குக் கிடையாதா?
பொன்னு அடுப்பு வச்சு
பொங்க வச்சேன் சாதங்கறி
பொங்கி வெளியே வந்தா
பொகை போவச் சன்னலுண்டு
பொங்கி வெளியே வந்தா
புருசனில்லாப் பாவியென்பார்
ஆக்க அடுப்புமுண்டு
அனலும் போவ சன்னலுண்டு
ஆக்கி வெளியே வந்தா
அரசனில்லாப் பாவியென்பார்
வட்டார வழக்கு
:
பொகை-புகை
;
போவ-போக(போச்சு).
|
உதவியவர்
:
செல்லம்மாள்
சேகரித்தவர்:
கு. சின்னப்ப பாரதி |
இடம்:
மாடகாசம்பட்டி,
சேலம் மாவட்டம். |
|